தேசிய மட்ட பாடசாலை விளையாட்டு விழா – 2016 இன் முடிவுகள்

1545

இவ்வருடத்திற்கான தேசிய மட்ட பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதிக் கட்டப் போட்டியான மெய்வல்லுனர் போட்டிகளின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் நிகழ்வுகள் கோலாகலமாக நேற்று நடந்து முடிந்தன.

இந்தப் போட்டிகளில் மொத்தமாக 855 புள்ளிகளைப் பெற்ற மேல் மாகாணம் முதல் இடத்தையும், 595 புள்ளிகளுடன் மத்திய மாகாணம் இரண்டாவது இடத்தையும் பெற்றன.

இந்தப் போட்டிகளின் முடிவுகளின்படி, மேல் மாகாணத்தைச் சேர்ந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஆண்கள் பிரிவில் 100 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுக்கொண்டது. அதேவேளை, பெண்கள் பிரிவில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த வலல ஏ ரத்நாயக்க கல்லூரி 150 புள்ளிகளுடன் முதலிடத்தை சுவீகரித்தது.

போட்டிகளின் சிறந்த வீரராக 19 வயதிற்குட்பட்ட பிரிவில் முப்பாய்ச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்த ஷமல் குமாரசிரி (டி.எஸ். சேனாநாயக்க ..வித்தியாலயம் – மீரிகம) தெரிவு செய்யப்பட்டதோடு, சிறந்த வீராங்கனையாக வட மேல் மாகாணத்தின் ஹாசினி பமோதா (ஹோலி பமிலி கன்வன்ட்வென்னப்புவ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மெய்வல்லுனர் போட்டிகளின் மாகாண அடிப்படையிலான புள்ளிகள்

மேல் மாகாணம்
ஆண்கள் – 502
பெண்கள் – 353
மொத்தம் – 855

மத்திய மாகாணம்
ஆண்கள் – 213
பெண்கள் – 279
மொத்தம் – 492

சபரகமுவ மாகாணம்
ஆண்கள் – 126
பெண்கள் – 178
மொத்தம் – 304

வட மேல் மாகாணம்
ஆண்கள் – 147
பெண்கள் – 128
மொத்தம் – 275

தென் மாகாணம்
ஆண்கள் – 93
பெண்கள் – 145
மொத்தம் – 238

வட மாகாணம்
ஆண்கள் – 71
பெண்கள் – 51
மொத்தம் – 122

ஊவா மாகாணம்
ஆண்கள் – 30
பெண்கள் – 55.5
மொத்தம் – 85.5

வட மத்திய மாகாணம்
ஆண்கள் – 11
பெண்கள் – 34.5
மொத்தம் – 45.5

கிழக்கு மாகாணம்
ஆண்கள் – 37
பெண்கள் – 3
மொத்தம் – 40

வயதடிப்படையிலான வெற்றியாளர்கள் விபரம்

15 வயதிற்குட்பட்ட ஆண்கள்- சிலாபம் புனித மாரியா கல்லூரி (வட மேல் மாகாணம்)
15 வயதிற்குட்பட்ட பெண்கள் – கொழும்பு மகளிர் கல்லூரி (மேல் மாகாணம்)
17வயதிற்குட்பட்ட ஆண்கள்- புனித பெனடிக்ஸ் கல்லூரி (மேல் மாகாணம்)
17 வயதிற்குட்பட்ட பெண்கள்- வலல ஏ ரத்நாயக்க கல்லூரி (மத்திய மாகாணம்)
19 வயதிற்குட்பட்ட ஆண்கள்- மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (மேல் மாகாணம்)
19 வயதிற்குட்பட்ட பெண்கள்- வலல ஏ ரத்நாயக்க கல்லூரி (மத்திய மாகாணம்)
21 வயதிற்குட்பட்ட ஆண்கள்- கோகாலை புனித மரியார் கல்லூரி (சபரகமுவ மாகாணம்), புனித ஜோசப் வாஸ் கல்லூரி (வட மேல் மாகாணம்)
21 வயதிற்குட்பட்ட பெண்கள்- வலல ஏ ரத்நாயக்க கல்லூரி (மத்திய மாகாணம்)

நேற்றைய ஐந்தாம் நாள் போட்டி நிகழ்வுகள் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் கோலுன்றிப் பாய்தல் நிகழ்வுடன் ஆரம்பமானது. மேலும், 21 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் உயரம் பாய்தல், 15 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் தட்டெறிதல் மற்றும் 21 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவின் நீளம் பாய்தல் ஆகிய போட்டிகளும் அதே நேரத்தில் நடைபெற்றன.

19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் கோலுன்றிப் பாய்தல் போட்டியில் K. நப்தலிஜியோஷன் தங்கம் வென்றார். யாழ்ப்பாணம் அருநோதயா கல்லூரியைச் சேர்ந்த இவர் இப்போட்டியில் 4.61 மீட்டர் உயரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையையும் நிகழ்த்தினார்.

15 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் தட்டெறிதல் போட்டியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ரிஷானன் தங்கம் வென்றார். மேலும் 21 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் உயரம் பாய்தலில் வட மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்திய சானுக தங்கம் வென்றார். அதேபோல், 21 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவின் நீளம் பாய்தலில் வட மத்திய மாகாணத்தின் M.விஜேசிங்க வெற்றி பெற்றார்.

மேலும், 17, 19, 21 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடல் போட்டிகளும் நடைபெற்றன. அதேவேளை 19 மற்றும் 21 வயதிற்குட்பட்ட 5,000 மீட்டர் போட்டிகளில் மத்திய மாகாண வீரர்கள் பதக்கங்களை சுவீகரித்தனர்.

15 வயதிற்குட்பட்ட 200 மீட்டர் இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவு போட்டியில் வட மேல் மாகாணத்தை சேர்ந்த பெரேரா வெற்றி பெற, பெண்கள் பிரிவில் மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சந்தீபா ஹெண்டர்சன் வெற்றி பெற்றார்.

நேற்று இடம்பெற்ற ஏனைய போட்டிகளின் வெற்றியாளர்கள்

17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு – 200 மீட்டர்
சந்துஷ் வீரசிங்க
யோதசிங்க
சுராஜ் தினுஷ

17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு – 200 மீட்டர்
தாரகா திவயஞ்சலி
எவந்தி எமெஷிகா
நேதாலி மல்பன

19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு – 200 மீட்டர்
தர்ஷன
ரணவீர
பண்டார

19 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு – 200 மீட்டர்
துலஞ்சலி
யாமிக்
S குமாரசிங்க

21 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு – 200 மீட்டர்
மினிமுத்து
யசிரு சமோதிய
பிரபாஸ்வர டி சொய்சா

21 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு – 200 மீட்டர்
உதயங்கனி
ஹெஷானி
ரவீஷா ஜீவனி

21 வயதிற்குட்பட்ட 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் முறையே அபேசிங்க மற்றும் C. வீரவர்தன ஆகியோர் முதலிடம் பெற்றனர். மேலும் 19 வயதிற்குட்பட்ட 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் மேல் மாகாணத்தின் சங்கல்ப பண்டார மற்றும் மத்திய மாகாணத்தின் S. குமாரசிங்க ஆகியோர் தங்கம் வென்றனர்.

17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு – 800 மீட்டர்

கருணாரத்ன
திரான் கவிஷ்க
மதுஷங்க

17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு – 800 மீட்டர்

ஹேரத்
K. டி சொய்சா
N. ஜயசிங்க

நேற்றையை போட்டிகளின் இறுதி நிகழ்வுகளாக 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டிகள் இடம்பெற்றன. அவற்றில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, புனித ஆசிர்வாதப்பர் கல்லூரி மற்றும் வலல ஏ. ரத்நாயக்க கல்லூரிகள் முதலிடம் பெற, திரித்துவக் கல்லூரி, ரோயல் கல்லூரி, புனித பேதுரு கல்லூரி, கேகாலை புனித ஜோசப் கல்லூரி, விசாகா கல்லூரி மற்றும் மஹாமாய கல்லூரிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுக்கொண்டன.

போட்டிகளின் நிறைவு வைபவத்தில் அமைச்சர் M.H.ஹலீம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக ஆகியோர் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகள் : நான்காம் நாள் முடிவுகள்

இம்முறை முறியடிக்கப்பட்ட சாதனைகள்

ஆண்கள் பிரிவு

போட்டி பிரிவு சாதனை நிகழ்த்தியவர் நேரம் /அளவு பாடசாலை மாகாணம்
100 மீட்டர் 15 .கீழ் எஸ்.எம். பெரேரா 11.2 செக் புனித.மாரியார் கல். – சிலாபம் வட மேல் மாகாணம்
200 மீட்டர் 15 .கீழ் எஸ்.எம். பெரேரா 22.9 செக் புனித.மாரியார் கல். – சிலாபம் வட மேல் மாகாணம்
200 மீட்டர் 15 .கீழ் .அனுரதா சிரிமல் 13.6 செக் பெர்ரவேட்ஸ் கல். – கண்டி மத்திய மாகாணம்
100 மீட்டர் 17 .கீழ் வை.சீ.எம் யோதசிங்க 11.0 செக் புனித மாரியார் கல். – கேகாலை சபரகமுவ
17 .கீழ் டி.எம் சுராஜ் தினுஷா 11.0 செக் மொரகெடிய மகா வித். சபரகமுவ
ஈட்டி எறிதல் 17 .கீழ் டீ. ரனசிங்க 66.96 மீட்டர் பண்டாரநாயக்க கல். கம்பஹா மேல் மாகாணம்
400 மீட்டர் தடை தாண்டல் 19 . கீழ் எம். உதித ஷந்திரசேன 52.9 செக் மாரிஸ் ஸ்டெல்லா கல். – நீர்கொழும்பு மேல் மாகாணம்
முப்பாய்ச்சல் 19 . கீழ் ஷமல் குமாரசிரி 15.52 மீட்டர் டி.எஸ். சேனாநாயக்க ..வித். மீரிகம மேல் மாகாணம்
கோலூன்றிப் பாய்தல் 19 . கீழ் நப்தலிஜியோஷன் 4.61 மீட்டர் அருநோதயா கல். – யாழ்ப்பாணம் வட மாகாணம்

தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளில் மேலும் இரண்டு புதிய சாதனைகள்

பெண்கள் பிரிவு

போட்டி பிரிவு சாதனை நிகழ்த்தியவர் நேரம் /அளவு பாடசாலை மாகாணம்
100 மீட்டர் 17 .கீழ் தாரக திவ்யான்ஜலி 12.4 செக் புனித ஜோசப் பெண்கள் கல். – கொழும்பு மேல் மாகாணம்
400 மீட்டர் தடை தாண்டல் 19 .கீழ் துலன்ஜலி 1:02.0 நிமி அம்பகமுவ ..வித் மத்திய மாகாணம்
உயரம் பாய்தல் 19 .கீழ் புர்னிமா ஜயமாலி 1.7 மீட்டர் லீட்ஸ் சர்வதேச பாடசாலைபாணந்துறை மேல் மாகாணம்
நீளம் பாய்தல் 19 .கீழ் கே.கே. ரித்மா நிஷாதி 5.85 மீட்டர் தர்மசோக வித். தென் மாகாணம்
முப்பாய்ச்சல் 19 .கீழ் ஹாசினி ப்ரபோதா 12.66 மீட்டர் ஹோலி பமிலி கன்வன்ட்வென்னப்புவ வட மேல் மாகாணம்
கோலூன்றிப் பாய்தல் 21 .கீழ் ஜே.அனித்தா 3.30 மீட்டர் மகஜனா கல். – தெல்லிப்பளை வட மாகாணம்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா கண்டியில் ஆரம்பம்