அபார வெற்றியின் மூலம் தொடரை வென்றது இலங்கை

2665
Kusal Janith Perera
Getty Images

இலங்கை – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டப்ளின் நகரில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது  அதன்படி இலங்கை அணியின் குசால் பெரேரா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அயர்லாந்து பந்து வீச்சை விளாசித் தள்ளினார்கள்.

அரைச்சதம் அடித்த குணதிலகா 63 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து பிரசன்னா களம் இறங்கினார். இவர் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து வானவேடிக்கை நிகழ்த்தினார். 46 பந்துகளை மட்டுமே சந்தித்த பிரசன்னா 5 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 95 ஓட்டங்களைக் குவித்தார். மறுமுனையில் விளையாடிய குசால் பெரேரா சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய குசால் பெரேரா 128 பந்துகளில் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 135 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த மஹ்ரூப்  16 பந்துகளில் 29 ஓட்டங்களையும், மெத்திவ்ஸ்  18 பந்துகளில் 27 ஓட்டங்களையும் குவிக்க, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்களைக் குவித்தது.

பின் 378 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி 45 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அயர்லாந்து அணி சார்பாக மெக்ப்ரின் 79 ஓட்டங்களையும் பொய்ன்டனர் 36 ஓட்டங்களையும் எண்டர்சன் 34 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் லக்மால் 4 விக்கட்டுகளையும், சீகுகே பிரசன்ன 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணி 136 ஓட்டங்களால் வெற்றபெற்றது. இந்தப் போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக தசுன் ஷானக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை  2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டது. இந்த நிலையில் இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 1ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நேற்றைய  போட்டியில் 4 வருடங்களுக்கு பின் இலங்கை அணியில் இணைந்த பர்வீஸ் மஹ்ரூப் துடுப்பாட்டத்தில் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கலாக 29 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை ஒரு விக்கட்டையும்  கைப்பற்றினார் என்பது முக்கிய அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

SL - INNIRE - INN