அவரச சத்திரசிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ள அசேல குணரத்ன

2723
Asela Gunaratne doubtful

காலியில் ஆரம்பமான இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று புதன்கிழமை (26) களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை அணி வீரர் அசேல குணரத்னவின்  இடது கை கட்டை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நீடிப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

லஹிரு குமார வீசிய 14 ஆவது ஓவரில் ஷிகன்தர் தவான் ஓப் திசையில் அடித்த பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் சென்றபோது அந்த பிடியெடுப்பை குணரத்ன தவறவிட்டார். இதன்போது ஏற்கனவே கட்டுப் போட்டிருந்த அவரது இடது கை மணிக்கட்டு பகுதியில் இருக்கும் கட்டை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இலங்கையுடனான முதல் டெஸ்டில் வைரஸ் காய்ச்சலால் ராகுல் நீக்கம்

காலியில் வரும் புதன்கிழமை (26) ஆரம்பமாகவுள்ள இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட…

இதனைத் தொடர்ந்து உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறிய குணரத்ன மேலதிக சிகிச்சைக்காக கொழுப்புக்கு அழைத்துவரப்பட்டார்.

இப்போட்டியில் அதிரடியாக ஆடிய தவான் 168 பந்துகளில் 13 பௌண்டரிகளுடன் 190 ஓட்டங்களை விளாசியதால் இந்திய அணி போட்டியின் முதல் நாளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

“அவருக்கு கொழும்பில் அவசர சத்திரசிகிச்சை நடைபெறுகிறது. போட்டியின் எஞ்சிய பகுதியில் அவர் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. எஞ்சிய போட்டிகளிலும் அவரது பங்கேற்பு சந்தேகமாக உள்ளது” என்று இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க அசேலவின் நிலைமையை உறுதி செய்தார்.

இதனால் குணரத்னவின் பகுதி நேர பந்துவீச்சு மற்றும் மத்திய வரிசையில் அவரது துடுப்பாட்டத்தை இலங்கை அணி இழந்திருப்பது பெரும் பின்னடைவாகும். அண்மையில் ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேயுடனான டெஸ்ட் போட்டியில் அவர் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றமை நினைவு கூறத் தக்கது.