கொழும்பில் கிரிக்கெட்டுக்கு பிரபல்யமாக காணப்படும் கத்தோலிக்க பாடசாலைகளான புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி ஆகியவற்றுக்கிடையில் நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் தொடரான “84ஆவது புனிதர்களின் சமர் (Battle of Saints) “ இன்று (2) பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகியது.
இரண்டு நாட்கள் கொண்ட வரலாற்றுப் பூர்வமிக்க இந்த பெரும் கிரிக்கெட் போட்டியின் (BIG MATCH) நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரியின் தலைவர் சந்துஷ் குணத்திலக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை புனித ஜோசப் கல்லூரிக்கு வழங்கியிருந்தார்.
அதிரடிக்கு தயாராகும் 84ஆவது புனிதர்களின் சமர்
கொழும்பின் இரு பிரதான கத்தோலிக்க…
பாடசாலை கிரிக்கெட்டில் முன்னிலை அணிகளாக காணப்படும் இந்த கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த சமரில் முடிவு ஒன்றினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கோடு இத்தொடரின் ஒரு இன்னிங்ஸ் 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக ஜோசப் கல்லூரி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஜொஹான்னே டி சில்வா மற்றும் இலங்கை கனிஷ்ட அணி வீரர் ரெவான் கெல்லி ஆகியோருடன் ஆரம்பம் செய்தது.
இன்றைய நாளுக்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால், ஜோசப் கல்லூரி தொடக்கத்திலேயே எதிரணியின் தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான சந்துஷ் குணத்திலக்கவிடம் முதல் விக்கெட்டினைப் பறிகொடுத்திருந்தது. இதனால் ஜொஹன்னே டி சில்வா ஏமாற்றமான இன்னிங்ஸ (8) ஓன்றுடன் போல்ட் செய்யப்பட்டு ஓய்வறை நடந்திருந்தார்.
இந்த விக்கெட்டினை அடுத்து துரித கதியில் புதிய துடுப்பாட்ட வீரராக வந்திருந்த நிப்புன் சுமனசிங்கவின் விக்கெட்டும் குறுகிய ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது. பின்னர் ஜோசப் கல்லூரிக்கு நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரெவான் கெல்லியின் விக்கெட்டும் 19 ஓட்டங்களுடன் பேதுரு கல்லூரியின் உபதலைவர் அமீன் மிப்லாலின் சுழலில் கைப்பற்றப்பட்டது.
மிகவும் துரிதமான விக்கெட்டுக்கள் மூலம் முக்கிய வீரர்களை இழந்த ஜோசப் கல்லூரியினை சரிவிலிருந்து மீட்க ஓரே நம்பிக்கையாக அவ்வணித்தலைவர் ஜெஹான் டேனியல் மத்திய வரிசையில் போராட்டம் ஓன்றினை காண்பித்திருந்தார். ஜெஹான் பெற்றுக்கொண்ட அரைச்சதம் மூலம் ஜோசப் கல்லூரி சரிவிலிருந்து ஓரளவு மீண்டு கொண்டது.
தொடர்ந்தும் எதிரணிக்கு சவால் தரும் விதமாக ஜெஹான் ஓட்டங்கள் சேர்க்க மறுமுனையில் சிறந்த பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என்பவற்றினை வெளிப்படுத்திய பேதுரு கல்லூரி அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது.
முடிவில் ஜெஹான் டேனியலினையும் அமீன் மிப்லால் சதம் ஒன்றினை எட்டிய வேளையில் ஓய்வறை அனுப்ப, 53.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து புனித ஜோசப் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக 195 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.
ஜோசப் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஜெஹான் டேனியல் 115 பந்துகளினை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 97 ஓட்டங்களினைப் பெற்றிருக்க, அவ்வணியில் இரண்டாவது அதிகபட்சமாக ரெவான் கெல்லி பெற்ற வெறும் 19 ஓட்டங்களே அமைந்திருந்தது.
புனித பேதுரு கல்லூரியின் பந்துவீச்சில் சச்சின் சில்வா 3 விக்கெட்டுக்களையும் அமீன் மிப்லால் மற்றும் கனிஷ்க மதுவந்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சுருட்டியிருந்தனர்.
புனித ஜோசப் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை அடுத்து பேதுரு கல்லூரி வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தனர்.
பேதுரு கல்லூரியின் ஆரம்ப வீரர்களான சந்துஷ் குணத்திலக்க மற்றும் ஷெனோன் பெர்ணாந்து ஆகியோரின் விக்கெட்டுக்களை அவர்கள் இருவரும் 10 ஓட்டங்களை எட்டுவதற்குள் ஜோசப் கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியிருந்தனர்.
நிரோஷன், மாலிங்க மற்றும் மெதிவ்ஸின் இழப்பு குறித்து குருசிங்கவின் விளக்கம்
சுதந்திர கிண்ண முத்தரப்பு …
எனினும், நான்காம் ஜந்தாம் இலக்கங்களில் முறையே துடுப்பாட வந்த சலித் பெர்ணாந்து மற்றும் ரன்மித்த ஜயசேன ஆகிய வீரர்கள் மிகவும் நிதானமாக துடுப்பாடி அணியை கட்டியெழுப்பினர். இவர்கள் இருவரும் பெற்ற அரைச்சதங்களால் பேதுரு கல்லூரியானது ஜோசப் கல்லூரியின் முதல் இன்னிங்ஸை அழுத்தங்கள் ஏதுமின்றி நெருங்கியிருந்தது.
போட்டியின் முதல் நாள் முடிவுற ஒரு மணித்தியாலத்திற்குள் சலித் மற்றும் ரன்மித்த ஆகியோரின் விக்கெட்டுக்கள் பறிபோயிருந்தன. இதில் சலித பெர்ணாந்து 6 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 58 ஓட்டங்களையும், ரன்மித்த ஜயசேன 55 ஓட்டங்களினையும் குவித்திருந்தனர்.
இரண்டு வீரர்களினதும் அரைச்சதங்களோடு முதல் நாளில் ஸ்திர நிலை ஒன்றினைப் பெற்றுக்கொண்ட புனித பேதுரு கல்லாரியானது 49 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. களத்தில், பப்சார ஹேரத் 17 ஓட்டங்களுடனும் கனிஷ்க மதுவந்த 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.
ஜோசப் கல்லூரியின் இன்றைய நாளுக்கான பந்துவீச்சில் சுழல் வீரர்களான துனித் வெல்லால்கே மற்றும் அஷான் டேனியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் போட்டியின் சுருக்கம்




















