சர். ஜோன் டார்பெட் மெய்வல்லுனர் போட்டிகளில் சாதனை மழை

824
Six meet records tumble at the Sir John Tarbet senior meet

86ஆவது சர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டிகள்  செப்டெம்பர் 13ஆம் திகதி தியகம மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் 3200 வீர, வீராங்கனைகள் பங்குபற்றலுடன் ஆரம்பாமாகியது.

1920ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டியானது இலங்கையின் பழைமை வாய்ந்த மேல்வல்லுனர் போட்டியாகும். இம்முறை இப்போட்டியானது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தகுதி பெரும் போட்டியாகவும் அமைந்து இருப்பதானால், பாடசாலை சாராத வீர,வீராங்கனைகளும் பதக்கங்களுக்காக அன்றி, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் தகுதி பெறுவதற்காக இப்போட்டிகளில் பங்குகொள்கின்றனர்.

போட்டியின் முதல் நாளன்று 3 போட்டி சாதனைகள் இளம் வீரர்களால் முறியடிக்கப்பட்டது. நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த திவங்க உஷான், ஆண்களுக்கான 20 வயதிற்குட்பட்ட  உயரம் பாய்தல் போட்டியில் 2.17 மீட்டர் உயரம் பாய்ந்து முன்னைய சாதனையை 1 சென்றி மீட்டாரால் முறியடித்தார். ஆண்களுக்கான 20 வயதிற்குட்பட்ட தட்டு எறிதல் போட்டியில், தல்தெக்க புனித ரீடாஸ் கல்லூரியைச் சேர்ந்த மலிந்த மதுஷங்க 47.22 மீட்டர் தூரம் தட்டெறிந்து சாதனை புரிந்தார். நாப்தைல் ஜேசன் 18 வயதிற்குட்பட்ட தடியூன்றி தாண்டுதல் போட்டியில் 4.56 மீட்டர் தூரம் பாய்ந்து தன்னுடைய முன்னைய சாதனையை அவரே முறியடித்தார்.

இரண்டாம் நாளான 14 ஆம் திகதி மேலும் 3 போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டன. வளல ரத்நாயக்க மத்திய கல்லூரியைச் சேர்ந்த எம்.எஸ்.குமாரசிங்க,பெண்களுக்கான 18 வயதிற்குட்பட்ட 800 மீட்டர் ஓட்டப் போட்டியை 2:13.4 நிமிடங்களில் ஓடி முடித்து 2004ஆம் ஆண்டு நெலும் குலரத்னவினால் நிலை நாட்டப்பட்ட சாதனை நேரமான 2:14.8 இனை முறியடித்து சாதனை புரிந்தார். அம்பலாங்கொட தர்மசோக கல்லூரியைச் சேர்ந்த ரித்மா நிஷாதி 16 வயதிற்குட்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில் 12.21 மீட்டர் பாய்ந்து புதிய சாதனை புரிந்தார். மத்தியக் கல்லூரியைச் சேர்ந்த மதுஷங்க 18 வயதிற்குட்பட்ட 2000 மீட்டர் ஸ்டீப்ல் சேஸ் போட்டியை 6:05.9 நிமிடங்களில் ஓடி முடித்து சாதனை புரிந்தார்.

1ஆம் மற்றும் 2ஆம் நாட்களின் முடிவுகள்

ஆண்களுக்கான முடிவுகள்

18 வயதிற்குட்பட்ட 3000 மீட்டர் :

  • எரந்த மதுஷங்க (ஜனாதிபதி கல்லூரி, அம்பகஸ்தொவ) 9: 05.2 நிமிடங்கள்
  • தனஞ்சய அல்விஸ் (ஸ்ரீ ராகுல கல்லூரி, கட்டுகஸ்தோட்ட) 9:06 நிமிடங்கள்

16 வயதிற்குப்பட்ட தட்டெறிதல் :

  • நிபுன் தில்ருக்ஷன் (புனித மேரிஸ் கல்லூரி, சிலாபம்) 48.29 மீட்டர்
  • பசிந்து நிம்சர (புனித செபாஸ்டியன் கல்லூரி, கந்தான) 46.97 மீட்டர்
  • ஆனந்த் பாலச்சத்திரன் (ஹார்ட்டலி கல்லூரி, பேதுருமுனை) 45.27 மீட்டர்
  • டில்ஹார பெரேரா (பெனடிக்ட்ஸ் கல்லூரி, கொழும்பு) 45.05 மீட்டர்

20 வயதிற்குட்பட்ட 400 மீட்டர் தடைகள போட்டி :

  • உதித்த சந்திரசேன (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு) 57.3 செக்கன்

16 வயதிற்குப்பட்ட 400 மீட்டர் தடைகள போட்டி :

  • குமுத் ஹஸிந்து (தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய ) 56.6 செக்கன்
  • சிஹால் தக்ஷித (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு) 57.3 செக்கன்

18 வயதிற்குப்பட்ட 400 மீட்டர் தடைகள போட்டி :

  • கொடிகார (மலியதேவ கல்லூரி, குருநாகல) 54.6 செக்கன்
  • ஷெஹான் லஹிரு (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு) 57.3 செக்கன்

20 வயதிற்குப்பட்ட தடியூன்றி தாண்டுதல் :

  • டிலக்ஷன் (மகனஜன கல்லூரி, தெல்லிப்பளை) 4.3 மீட்டர்

16 வயதிற்குப்பட்ட 200 மீட்டர் :

  • அதீஷ அஞ்சன (லும்பினி கல்லூரி, கொழும்பு) 22.5 செக்கன்
  • கவிந்து பண்டார (ஆசிய க்ராம்மர் பாடசாலை) 22.8 செக்கன்
  • மிலிந்த பெரேரா (புனித மேரிஸ் கல்லூரி, சிலாபம்) 22.9 செக்கன்
  • பியுமிக்க (கிரில்லவள மத்திய கலோரி) 23 செக்கன்
  • சச்சின் செனவிரத்ன (ரோயல் கல்லூரி, கொழும்பு) 23.6
  • அதீப துணசேன (அசோகா வித்தியாலயம், கொழும்பு) 23.6 செக்கன்