டி மெசனோட் கல்லூரி வலுவான நிலையில்

105

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டி இன்று நிறைவடைந்ததோடு மேலும் ஒரு போட்டி ஆரம்பமானது.

ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு  

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி மழையால் தடங்களுக்கு உள்ளான நிலையிலும் இரு அணிகளும் சிறப்பாகத் துடுப்பொடுத்தாடியமையினால் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது.

விஹான் குணசேகரவின் சகலதுறை ஆட்டத்தால் வெற்றியை சுவீகரித்த டி.எஸ். சேனநாயக்க கல்லூரி

இரண்டாவது நாளிலும் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ரிச்மண்ட் கல்லூரி 226 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவின்து தீக்ஷய அரைச்சதம் பெற்றார். சிறப்பாக பந்துவீசிய நிபுன் லக்ஷான் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்தது. கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது. யெஹான் நயனஜித் 66 ஓட்டங்களை பெற்றார். சீரற்ற காலநிலையால் இரண்டாவது நாள் ஆட்டம் 38 ஓவர்களுக்கு மட்டுப்பட்டது.  

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 226/9d (71.2) – அவிந்து தீக்ஷன 64, ஆதித்ய சிறிவர்தன 44, திலும் சதீர 31, தவீஷ அபிஷேக் 22, நிபுன் லக்ஷான் 3/42,சவன் பிரபாஷ் 2/27, சன்தரு டயஸ் 2/48

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 132/3 (31.3) – யெஹான் நயனஜித் 66, யொஹான் சச்சித 29, நிமேஷ் பெரேரா 26, திலும் சதீர 2/31  

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது


மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் டி மெசனோட் கல்லூரி, கண்டி

டி மெசனோட் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தெரிவு செய்த டி மெசனோட் கல்லூரி, எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தது.

சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷை விட்டு இலங்கை அணிக்கு வருவாரா?

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மலியதேவ கல்லூரி 35.5 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டது. ரொமென் பெர்னாண்டோவின் பந்துக்கு முகம்கொடுக்க முடியாமல் மலியதேவ துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

D குழுவுக்காக நடந்த இந்த போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த டி மெசனோட் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.  

குறிப்பாக மிதில கீத் 53 ஓட்டங்களையும் சாலிய ஜூட் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்று டி மெசனோட் கல்லூரிக்கு வலுச்சேர்த்தனர். இதன்மூலம் அந்த அணி 3 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 81 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.  

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்

போட்டியின் சுருக்கம்

மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்) – 102 (35.5) – சன்ஜீவன் பிரியதர்ஷன் 43*, முதித் பிரேமதாச 22, ரொமல் பெர்னாண்டோ 5/22, சிஹின சிதுமின 3/22

டி மெசனோட் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 183/7 (40.5) – மிதில கீத் 53, சாலிய ஜூட் 51*, பிரவீன் பொன்சேகா 22, மிதுல் செனவிரத்ன 21, விஷ்வ திசானாயக்க 4/43, துலாஜ் ரணதுங்க 2/42