மல்ஷித்தின் அபார பந்துவீச்சினால் அலோசியஸ் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

106

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு – 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் 2 போட்டிகள் இன்று (18) நிறைவுக்கு வந்தன. இதில் காலி புனித அலோசியஸ் கல்லூரி அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்திருந்ததுடன், கொழும்பு இசிபதன மற்றும் டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி அணிகளுக்களுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இலங்கை தோற்றாலும் ஆசிய கிண்ணத்தில் சாதனை படைத்த மாலிங்க

புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் புனித மரியாள் கல்லூரி, கேகாலை

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய புனித அலோசியஸ் கல்லூரி அணி, சதுர பிரபாத்தின் அரைச்சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் புனித மரியாள் கல்லூரி அணியின் இஷான் வீரசூரிய 93 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய புனித மரியாள் கல்லூரி அணி, மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 101 ஓட்டங்களையே முதல் இன்னிங்ஸிற்காகப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் அலோசியஸ் கல்லூரி அணிக்காக வின்துக மல்ஷித் 4 விக்கெட்டுக்களையும், கவிந்து தில்ஹார 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.  

இதன்படி, பலோ ஓன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட மரியாள் கல்லூரி அணியினர், எதிரணி வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 43 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர்.  

டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

முதல் இன்னிங்ஸில் மரியாள் கல்லூரி அணிக்கு பந்துவீச்சில் அச்சுறுத்தலை கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வின்துக மல்ஷித், 2ஆவது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.  

போட்டியின் சுருக்கம்

அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 244/10(73.1)சதுர பிரபாத் 53, சந்தீப சமோத் 32, ஒமல் சந்தீப் 31, இஷான் வீரசூரிய 6/93, எச்.வை தியகம 2/30

புனித மரியாள் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 101/10 (42.2) தினேஷ் பெதியகொட 18, வின்துக மல்ஷித் 4/43, கவிந்து தில்ஹார 3/13

புனித மரியாள் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 43/10 (23.4)இஷான் வீரசூரிய 26*, வின்துக மல்ஷித் 5/22, மனுஷ்க சமித் 3/06, கவீஷ விலோச்சன 2/09

முடிவு – புனித அலோசியஸ் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் வெற்றி


டி. எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு

கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி வீரர்கள் முதல் இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டனர்.

அவ்வணிக்காக ஷெரோன் பாஸ்கரன் 62 ஓட்டங்களையும், அயன்த சவிந்து 59 ஓட்டங்களையும், மனேந்திர ஜயதிலக 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி வீரர்களுக்கு 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

கடந்த கால ஆசியக் கிண்ணத் தொடர்களின் சிறந்த பதிவுகள் – ஒரு மீள்பார்வை

இதன்படி, பலோ ஒன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட இசிபதன கல்லூரி அணியினர் 188 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

இசிபதன கல்லூரி அணி சார்பில் அதிகபட்சட்சமாக அஷேன் குணவரத்ன 69 ஓட்டங்களையும், ரவிந்து ரத்னாயக்க 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட முதிதிக்க லக்ஷான் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 281/7 (62.3) – ஷெரோன் பாஸ்கரன் 62, அயன்த சவிந்து 59, மனேந்திர ஜயதிலக 50, முதித்த லக்ஷான் 46, பசிந்து ஆதித்ய 42, மதுஷிக சந்தருவன் 3/96, ரவிந்து ரத்னாயக்க 2/23

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 150/10 (44.1) – ரவிந்து ரத்னாயக்க, 73, மனேந்திர ஜயதிலக 2/20, பசிந்து ஆதித்ய 2/22, நெதுஷான் குமார 2/35,

இசிபதன கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 188/8 (60.2) – அஷேன் குணவர்தன 69, ரவிந்து ரத்னாயக்க, 52, முதித்த லக்ஷான் 4/48

முடிவு போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.