சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் I முதல் சுற்றுக்காக இன்று முடிவுற்ற புனித பேதுரு கல்லூரி மற்றும் றோயல் கல்லூரிகளுக்கிடையிலான போட்டியில் ஹிமேஷ் ரதனாயக்கவின் அதிரடி சதத்துடன் றோயல் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்தது. அதே நேரம் இன்று ஆரம்பமாகிய இசிபதன கல்லூரி மற்றும் காலி மஹிந்த கல்லூரிகளுக்கிடையிலான போட்டியில் இசிபதன கல்லூரி சஞ்சுல அபேவிக்ரமவின் சதத்தின் உதவியுடன் 313 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

கொழும்பு, இசிபதன கல்லூரி எதிர் காலி, மஹிந்த கல்லூரி

முதல் சுற்றுக்காக B குழுவில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி முதலில் இசிபதன கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இசிபதன கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 93 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 313 ஓட்டங்களை பெற்று மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது.

இசிபதன கல்லூரி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய சஞ்சுல அபேவிக்ரம சதம் கடந்து 115 ஓட்டங்களை பெற்றார். மேலும் சஞ்சுல பண்டார 61 ஓட்டங்களையும் லேஷான் அமரசிங்க ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி, கொழும்பு : 313/7 (93) – சஞ்சுல அபேவிக்ரம 115, சஞ்சுல பண்டார 61, லேஷான் அமரசிங்க 51*, ஹர்ஷ ரத்நாயக்க 31


புனித பேதுரு கல்லூரி, பம்பலப்பிட்டி எதிர் கொழும்பு றோயல் கல்லூரி

முதல் இன்னிங்சுக்காக கொழும்பு றோயல் கல்லூரி, 72 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் இரண்டாம் நாளாக இன்றைய தினம் துடுப்பாட்டத்தை தொடர்ந்தது.

சிறப்பாக துடுப்பாடிய ஹிமேஷ் ரத்னாயக்க மற்றும் ரோனுக ஜயவர்தன ஆகியோரின் உதவியுடன் கொழும்பு றோயல் கல்லூரி 247 ஓட்டங்களை பெற்று 15 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்தது.

ஹிமேஷ் ரத்னயாக்க 117 ஓட்டங்களையும் ரோனுக ஜயவர்தன 51 ஓட்டங்களையும் றோயல் கல்லூரி சார்பாக பெற்றுக் கொடுத்தனர்.

புனித பேதுரு கல்லூரி சார்பாக பந்துவீச்சில் சத்துர ஒபேசேகற, சந்தூஷ் குணதிலக மற்றும் மொஹமட் அமீன் ஆகியோர் தலா3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி சந்தூஷ் குணதிலக்க ஆட்டமிழக்காமல் பெற்ற அதிரடி சதத்தின் உதவியுடன் 203 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்தி றோயல் கல்லூரியை துடுப்பாடுமாறு மீண்டும் பணித்தது.

அதனையடுத்து வெற்றி இலக்காக 215 ஓட்டங்களை பெற துடுப்பாடக் களமிறங்கிய றோயல் கல்லூரி 94 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுற்றதன் காரணமாக போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, பம்பலப்பிட்டி (முதல் இன்னிங்ஸ்) : 235/9d (65) – லக்ஷின ரொட்ரிகோ 73, வினுள் குணவர்தன 81, அபிஷேக் பெரேரா 3/38, மனுல பெரேரா 3/68

றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) : 247 (65.2) – ஹிமேஷ் ரத்னயக்க 117, ரோணுக்க ஜயவர்தன 55, பசிந்து சூரியபண்டார 31, ஹெலித விதானகே 30, சத்துர ஒபேசேகற 3/31, சந்தூஷ் குணதிலக்க 3/49, முஹம்மத் அமீன் 3/102

புனித பேதுரு கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 203/3d (38) – சந்தூஷ் குணதிலக்க 103*, லக்ஷின ரொட்ரிகோ 55*, வினுள் குணவர்தன 30, மனுல பெரேரா 2/75

றோயல் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) : 94/3 (13) – பசிந்து சூரியபண்டார 52*, ரோணுக்க ஜயவர்தன 23

போட்டி முடிவு : போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. கொழும்பு றோயல் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி.


புனித திரித்துவ கல்லூரி, கண்டி எதிர் புனித செபஸ்தியன் கல்லூரி, மொறட்டுவ

A குழுவிற்காக, கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இன்று ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவ கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த வகையில் துடுப்பாடிய அவ்வணி, நிமேஷ் பண்டாரவின் அபார பந்து வீச்சு காரணமாக 73.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களுக்கு சுருண்டது. ட்ரேவோன் பெர்சிவெல் கூடிய ஓட்டங்களாக 37 ஓட்டங்களை பதிவு செய்தார். சிறப்பாக பந்து வீசிய நிமேஷ் பண்டார 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித செபஸ்தியன் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 20 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 60 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) : 189 (73.1) – ட்ரேவோன் பெர்சிவெல் 37, ருவின் பீரிஸ் 30, பூர்ண வனசேகற 27 நிமேஷ் பண்டார 5/62, ஆஷர் வர்ணகுலசூரிய 3/27

புனித செபஸ்தியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) : 60/1 (20) – துலாஜ் சில்வா 24*