இங்கிலாந்தில் இருந்து மீண்டும் ஜிம்பாப்வே திரும்பும் நட்சத்திர வீரர்கள்

678
Brendon Taylor & Kyle Jarvis return to westindies test series

இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களான நொட்டிங்கம்ஷயார் மற்றும் லங்காஷயார் அணிகளுக்கு விடைகொடுத்து மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பியுள்ள அவ்வணியின் முன்னாள் தலைவரான பிரெண்டன் டெய்லர் மற்றும் வேகப்பந்து வீச்சளாரான கையில் ஜார்விஸ் ஆகியோர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் தொடரும் வீரர்களுக்கான போட்டித்தடையும், அபராதமும்

உலகிலுள்ள அனைத்து மக்களையும் இன, மத, மொழி வேறுபாடின்றி இணைக்கின்ற சக்தியும், வல்லமையும் விளையாட்டுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக கால்பந்து…

இதன்படி, பிரெண்டன் டெய்லர் 2 வருடங்களின் பிறகும், கையில் ஜார்விஸ் 4 வருடங்களுக்குப் பிறகும் மீண்டும் ஜிம்பாப்வே அணிக்காக விளையாவுள்ளனர்.

2015 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கெதிரான முதல் சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்வே அணித் தலைவராக செயல்பட்ட டெய்லர், அந்நாட்டு கிரிக்கெட் சபையுடனான சம்பள முரண்பாட்டினால் 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்து இங்கிலாந்தின் பிராந்திய கழகமான நொட்டிங்கம்ஷயார் அணியுடன் 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இங்கிலாந்தின் கழக மட்ட போட்டிகளின் ஒப்பந்தத்தை இடைநடுவில் முடிவுக்கு கொண்டுவந்து ஜிம்பாப்வேயில் தற்போது வசித்து வருகின்ற தனது குடும்பத்தாருடன் இணைந்து கொள்ளும் நோக்கில், இங்கிலாந்துக்கு விடைகொடுத்துவிட்டு மீண்டும் ஜிம்பாப்வே அணியில் டெய்லர் இணைந்துகொள்ளவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் உத்தியோகபூர்வமக டெய்லர் அறிவித்தார்.

இதுகுறித்து டெய்லர் கருத்து வெளியிடுகையில், ”நொட்டிங்கம்ஷயார் அணியுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 3 பருவகாலங்களில் அதிக நண்பர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன் எமது அணி கடந்த 3 மாதங்களில் 2 பிரதான கிண்ணங்களைக் கைப்பற்றியது. இப்படி வெற்றிகரமான ஒரு பயணத்தை நான் இங்கிலாந்தில் மேற்கொண்டு வந்தாலும், எனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்வது கடினமாக உள்ளது. இதனால் மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்புகிறேன்” என்றார்.

அதேபோல, ஜிம்பாப்வே அணிக்காக 2011ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட கையில் ஜார்விஸ், 8 டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 9 T-20 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய பிறகு, நிதி நெருக்கடி மற்றும் சம்பள பிரச்சினை காரணமாக இங்கிலாந்தின் பிராந்திய கழகமான லங்காஷயார் அணியுடன் இணைந்துகொண்டார்.

தான் எட்டிய சாதனைகள் குறித்த மகிழ்ச்சியுடன் விடைபெறும் சங்கக்கார

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் இலங்கை அணியின்…

28 வயதான வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கையில் ஜார்விஸ், கடந்த 4 வருடங்களில் கவுண்டி போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி முன்னிலை வீரராகவும் வலம் வந்தார். எனினும், இப்பருவத்துடன் அவருடைய ஒப்பந்தக்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கையில் கருத்து வெளியிடுகையில், ”கடந்த 4 வருடங்களாக லங்காஷயார் அணியுடன் இணைந்து விளையாடக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து விளையாடியமை தொடர்பில் பெருமையடைகிறேன். மேலும், ஜிம்பாப்வே அணிக்கு மீண்டும் திரும்பவதற்கு எடுத்த முடிவு கடினமானதாக இருந்தது. ஆனாலும், சொந்த அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன்” என தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜிம்பாப்வே அணி போராடி தோற்றாலும், இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

இந்நிலையில் 2019 உலகக் கிண்ணப் போட்டிளுக்கான தகுதிகாண் போட்டிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ளன. அதற்கு முன்னதாக ஸ்கொட்லாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் தென்னாபிரிக்க அணியுடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் அவ்வணி விளையாடவுள்ளது.

அண்மைக்காலமாக, ஜிம்பாப்வே அணியின் தலைவர் கிரஹம் கிரீமர், சிகெண்டர் ராசா மற்றும் க்ரெய்க் ஏர்வின் உள்ளிட்ட வீரர்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கவுண்டி அணியிலிருந்து விலகி மீண்டும் ஜிம்பாப்வே அணியில் இணைந்துகொள்ளவுள்ள பிரென்டண் டெய்லர் மற்றும் கையில் ஜார்விஸின் வருகையானது 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி தகுதியைப் பெற்றுக் கொள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சாமர சில்வா மீதான தடை தற்காலிகமாக நீக்கம்

கிரிக்கெட் மகத்துவத்துக்கு கேடு விளைவித்த குற்றத்துக்காக இலங்கை அணியின் அனுபவமிக்க நட்சத்திர வீரர்களில்

இதேவேளை, ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் விசேட அழைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி இம்மாத இறுதியில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடடுவதற்காக ஜிம்பாப்வே வரவுள்ளது.

இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரை நிறைவுக்கு கொண்டுவந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, ஒரு வருட கால இடைவெளிக்குள் மீண்டும் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. முன்னதாக இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுடனான முற்தரப்பு ஒருநாள் தொடரில் அவ்வணி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதி ஜிம்பாப்வே வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, எதிர்வரும் 15ஆம் திகதி ஜிம்பாப்வே ஏ அணியுடனான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையிலான இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 2ஆவது டெஸ்ட் போட்டி 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்விரு டெஸ்ட் போட்டிகளும் புளவாயோ குயீன்ஸ் விளையாட்டுக் கழகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.