மூன்றாவது டெஸ்டில் பெட் கம்மின்ஸ் விளையாடுவாரா?

104
Cummins flies home for personal reasons

இந்திய அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய பெட் கம்மின்ஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இவ்வாறான நிலையில் பெட் கம்மின்ஸ் இந்தியா திரும்பி இந்தவார இறுதியில் மீண்டும் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எனவே, பெட் கம்மின்ஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியை தவறவிடமாட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

>> வனிந்து ஹஸரங்கவை தக்கவைத்த மென்செஸ்டர் அணி

அதேநேரம், முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள அவுஸ்திரேலிய அணி இந்தூரில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களை மேற்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்த மிச்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹேஷல்வூட் மற்றும் கிரிஸ் கிரீன் ஆகியோர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<