முதித லக்‌ஷான் 9 விக்கெட்டுகள்: DS சேனநாயக்க கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

155
Muditha-Lakshan-U19 Division 1 Schools Cricket - Round up

19 வயதுக்கு உட்டபட்ட சிங்கர் கிண்ண டிவிஷன் I, முதல் சுற்றுக்காக இன்றைய தினம் ஏழு போட்டிகள் நடைபெற்றன. குறித்த போட்டிகளில் 6 போட்டிகள் இன்றைய தினம்(21) சமநிலையில் முடிவுற்ற நிலையிலும் ஒரு போட்டி இரண்டாம் நாளாக நாளை(22) நடைபெறவுள்ளது.

றோயல் கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி – இரண்டாம் நாள்

சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் I, B குழுவில் முதல் சுற்றுக்காக மோதிக்கொண்ட இவ்விரு அணிகளில், கொழும்பு ஆனந்த கல்லூரி கவிந்து கிம்ஹான மற்றும் துஷான் ஹெட்டிகேவின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 64 ஓட்டங்களால் முன்னிலை பெற்றயது. எனினும் இரு அணிகளும் சமபலத்துடன் மோதிக்கொண்டதால் குறித்த போட்டி போதிய நேரமின்மை காரணமாக ஆட்ட நேர நிறைவின் போது வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

முதல் இன்னிங்சில் கொழும்பு, றோயல் கல்லூரி கவிந்து மதரசிங்கவின் 93 ஓட்டங்களின் உதவியுடன் பெற்றுக்கொண்ட 221 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய ஆனந்த கல்லூரி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக கவிந்து கிம்ஹான 73 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார்,

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய றோயல் கல்லூரி சார்பாக மீண்டும் அரைச் சதம் கடந்த கவிந்து மதரசிங்க ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 5விக்கெட்டுகள் இழந்து 154 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுற்று, போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டிசயின் சுருக்கம்:

கொழும்பு றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 221 (78.1) – கவிந்து மதரசிங்க 93, ஹெலித விதானகே 46, திலீப ஜயலத் 4/70, அசெல் சிகெரா 3/38

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 285 / 7d (58) – கவிந்து கிம்ஹான 73, துஷான் ஹெட்டிகே 64, கவிஷ்க அஞ்சுல 63, சஹன் சூரவீர 56, ஹிமேஷ் ராமநாயக்க 3/71

கொழும்பு றோயல் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 154/5 (45) – கவிந்து மதரசிங்க 51*, ஹெலித விதானகே 28, அசெல் சிகெரா 2/57, திலீப ஜயலத் 2/33

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. ஆனந்த கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் மஹிந்த கல்லூரி, காலி

கண்டி, தர்மராஜா கல்லூரியில் இன்று ஆரம்பித்த இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி மஹிந்த கல்லூரி முதலில் தர்மராஜா கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது.

அந்த வகையில் களமிறங்கிய தர்மராஜ கல்லூரி நிவந்த ஹேரத்தின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களை பெற்றுள்ளது. தர்மராஜ கல்லூரி சார்பாக நிவந்த ஹேரத் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை பெற்றுள்ளார்

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 188/5 (74) – நிவந்த ஹேரத் 59*, துவாஜ் பண்டார 46, தேஷான் குணசிங்க 28


DS சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் புனித அலோசியஸ் கல்லூரி, காலி – இரண்டாம் நாள்

பன்னிப்பிட்டிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில், போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய DS சேனநாயக்க கல்லூரி, இறுதிக் கட்டத்தில் வெற்றிக்காக இரண்டு விக்கெட்டுகளுடன் சிறிய எண்ணிகையிலான ஓட்டங்களை மாத்திரம் பெற வேண்டிய நிலையில், போதிய நேரமின்மை காரணமாக போட்டி நிறைவுற்றதால், வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

எனினும், முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரி  சகல விக்கெட்டுகளையும் இழந்து 54.1 ஓவர்களில் 169 ஓட்டங்களை குவித்தது, சிறப்பாக பந்து வீசிய முதித்த லக்ஷான் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

137 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாட பணிக்கப்பட்ட புனித அலோசியஸ் கல்லூரி 139 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுற்று, போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. புனித அலோசியஸ் கல்லூரி சார்பாக நவிந்து நிர்மல் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களைப் பெற்றார். முதித லக்‌ஷான் 76 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்:

DS சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 306 (87.5) – பசிந்து சானக 70, டெரோன் பாஸ்கரன் 40, முதித லக்ஷான் 41*, சஷிக கமகே 36, மெத்சித் ஜயமன்ன 35, தசுன் திமாஷ 28, சானுக நிகேசல 5/82, கவிஷ்க தில்ஷான் 3/72

அலோசியஸ் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 169 (54.1) – ரவிந்து சஞ்சன 31, சத்துர பிரபாத் 23, முதித லக்ஷான் 4/51, விஹான் குணசேகர 3/32, டொரின் பிட்டிகல 2/31

அலோசியஸ் கல்லூரி, காலி (இரண்டாம் இன்னிங்ஸ்): 139/8 (47) நவிந்து  நிர்மல் 53*, முதித்த லக்ஷான் 5/76

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. DS சேனநாயக்க கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


திரித்துவக் கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி – இரண்டாம் நாள்

திரித்துவக் கல்லூரியின் 264 ஓட்டங்களுக்கு பதிலாக தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி, நிபுன் சுமணசிங்க மற்றும் கேமரூன் துருகே ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 357 ஓட்டங்களை குவித்தது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிபுன் சுமணசிங்க சதம் கடந்து 158 ஓட்டங்களையும், கேமரூன் துருகே 70 ஓட்டங்களை பெற்றும் பங்களிப்பு செய்தனர். 93 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில், புனித ஜோசப் கல்லூரி ஆட்டத்தை நிறுத்தி திரித்துவக் கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது.

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய திரித்துவக் கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேரம் நிறைவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்:

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 264 (72.4) சண்முகநாதன் சனோகீத் 62, ட்ரெவோன் பெர்சிவ் 55, டி பானுகோபன் 32, கலன டி சொய்சா 24, ருச்சிர ஏக்கநாயக்க 4/51, ஹரீன் குரே 4/74

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 357/6d (74) நிபுன்  சுமணசிங்க 158, கேமரூன் துருகே 70, ஜெhaaன் பெர்னாண்டோபுள்ளே 67, ஷேவோன் பொன்சேகா 23, விமுக்தி நெத்மல் 4/128

திரித்துவக் கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்க்ஸ்): 180/4 (45) – சானுக பண்டார 72, பாதிய திசாநாயக்க 35 ,சண்முகநாதன் சனோகீத் 29, அவிஷ்க சேனாதீர 20*, தினெத் மதுராவல 2/25

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவ எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு

முதல் இன்னிங்சில் மொறட்டுவ, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி தமது சொந்த மைதானத்தில் பெற்றுக்கொண்ட 230 ஓட்டங்களுக்கு பதிலாக இரண்டாம் நாளில் முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி 78.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. புனித பேதுரு கல்லூரி சார்பாக வினுல் குணவர்தன 65 ஓட்டங்களையும் சந்தூஷ் குணதிலக 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கௌமல் நாணயக்கார 66 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 102 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

பிரின்ஸ் பெர்னாண்டோ கூடிய ஓட்டங்களாக 40 ஓட்டங்களை பதிவு செய்தார் . அதே நேரம் மொஹமட் அமீன் மற்றும் சதுர ஒபேசேகற தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்:

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 230/9d (85.1) – சவிந்து பீரிஸ் 49, அவிந்து பெர்னாண்டோ 51, சதுன் பெர்னாண்டோ 42, திலங்க மதுரங்க 44, மொஹமட் அமீன் 6/79

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 249/8d (78.5) – வினுள் குணவர்தன 65, சந்தோஷ் குணதிலக்க 59, ஷிவான் பெரேரா 40, கௌமல் நாணயக்கார 4/66, சஞ்சய பெர்னாண்டோ 2/43

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (இரண்டாம் இன்னிங்ஸ்): 102/6 (24) – பிரின்ஸ் பெர்னாண்டோ 40, மொஹமட் அமீன் 2/41, சதுர ஒபேசேகற 2/41

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித தோமியர் கல்லூரி, கல்கிசை எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு – இரண்டாம் நாள்

தமது சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த புனித தோமியர் கல்லூரி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததோடு, ஆட்டமிழக்காமல் ரொமேஷ் நல்லபெரும பெற்றுக்கொண்ட 97 ஓட்டங்களின் உதவியுடன் முதல் இன்னிங்சுக்காக 306 ஓட்டங்களை குவித்தது.

அத்துடன் தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய வெஸ்லி கல்லூரியின் விக்கெட்டுகளை கலன பெரேரா மற்றும் தினுற குணவர்தன ஆகியோரின் அதிரடி பந்து வீச்சினால் 69.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதல் இன்னிங்ஸில் 116 ஓட்டங்களால் புனித தோமியர் கல்லூரி முன்னிலை பெற்றது.

புனித தோமியர் கல்லூரியின் சார்பில் கலன பெரேரா மற்றும் தினுற குணவர்தன தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி இன்றைய நாள் ஆட்டம் நிறைவு பெறும் போது ஒரே ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 102 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்:

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்): 306 (88.5) – ரொமேஷ் நல்லப்பெரும 97*, தினுற குணவர்தன 63, சிதார ஹபுவின 43, டெல்லோன் பீரிஸ் 33, ரவிந்து கொடிதுவக்கு 23, சகுந்த லியனகே 4/93, ருசிக்க தங்கல்ல 2/55, மோவின் சுபசிங்க 2/72

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்):190 (69.2) – திலின பெரேரா 64, ஜேசன் டி சில்வா 51, சமோத் அதுலத்முதலி 24, கலன பெரேரா 4/32, தினுற குணவர்தன 4/29

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (இரண்டாம் இன்னிங்ஸ்): 102/1 (30.3) பாக்ய திசாநாயக்க 51*, தினுற குணவர்தன 46

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


பண்டாரனாயக்க கல்லூரி, கம்பஹா எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை

D குழுவிற்கான இந்தப் போட்டி டி மெசனொட் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டி மெசனொட் கல்லூரி முதலில் பண்டாரனாயக்க கல்லூரியை துடுப்பாட பணித்தது. அதன்படி அவ்வணி 71.4 ஓவர்கள் நிறைவில் 263 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

அதனை தொடர்ந்து துடுப்பாடக் களமிறங்கிய டி மெசனொட் கல்லூரி அணியினர் நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 9 ஓவர்களுக்கு 34 ஓட்டங்களை பெற்றிருந்தனர். தொடர்ந்து இன்று இரண்டாம் நாளாக துடுப்பாட்டத்தை தொடர்ந்த அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதே வேளை 34 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்து கொண்டது.

சிறப்பாக துடுப்பாடிய ரோஷித செனவிரத்ன  மற்றும்  தினித் பெர்னாண்டோ முறையே 62, 56 ஓட்டங்களை பெற்று பங்களிப்பு செய்தனர், அதே நேரம் சசிறி அதிகாரி 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்டங்களை கட்டுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது,

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக 34 ஓட்டங்கள் பின்னிலை பெற்ற நிலையில் களமிறங்கிய பண்டாரனாயக்க கல்லூரி 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையிலிருந்த சமயம் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுற்று போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்:

பண்டாரனாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 263 (71.4) – அரோச மதுஷான் 108*, சிசித மதனாயக்க 58, ரோஷித செனவிரத்ன 4/82, மிதில கீத் 3/37

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதல் இன்னிங்ஸ்): 297 (89.2) – ரோஷித செனவிரத்ன 62, தினித் பெர்னாண்டோ 56, தில்ருக் அந்தோணி 44, பிரவீண் பொன்சேகா 35, அவிஷ்க இந்திரஜித் 32, இரோஷ் டி சில்வா 21, சசிறி அதிகாரி 5/35, ஹிமத் ஜயவீர 3/70, ஜனிது ஜயவர்தன 2/71

பண்டாரனாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 51/4 (15) – ஜனிது ஜயவர்தன 16*, சிசித மதநாயக்க 16*, அஷேன் பெர்னாண்டோ 3/12

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. டி மெசனொட் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி