முடிவொன்றை எதிர்பார்த்து நிற்கும் சகோதரர்களின் சமர்

202

இலங்கையிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கிடையில் வருடாந்தம் நடைபெறுகின்ற கிரிக்கெட் சமர்கள் இவ்வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளன. இதில் கொழும்பின் பிரபல பாடசாலைகளான இசிபதன கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரிகளுக்கிடையிலான ’55ஆவது சகோதரர்களின் சமர்‘ (Battle of the Brothers) எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் இறுதியாக 1999ஆம் ஆண்டு வெற்றியைப் பதிவுசெய்த கொழும்பு இசிபதன கல்லூரியின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை இம்முறை போட்டித் தொடரில் முறியடிக்கும் எதிர்பார்ப்புடன் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி களமிறங்கவுள்ளது.

மீண்டும் சூடுபிடித்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர்

இலங்கை மக்களின் மகிழ்ச்சிக்கு காலங்காலமாக பிரதான காரணங்களில் ஒன்றாக…

இதன்படி, முன்னதாக நடைபெற்ற 45 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி சமநிலையில் நிறைவுக்கு வந்துள்ளது. எனவே, இம்முறை போட்டித் தொடரில் முடிவொன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஏற்பாட்டுக் குழுவினர் போட்டி முறையில் ஒரு சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் முதற்தடவையாக ஒவ்வொரு அணிக்கும் முதல் இன்னிங்ஸிற்காக தலா 60 ஓவர்கள் பந்துவீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பதிவுகள்

இவ்விரு பாடசாலைகளுக்குமிடையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் வெற்றிகள் மிகவும் அறிதாகவே இடம்பெற்றுள்ளன. இதன்படி, இறுதியாக 1999ஆம் ஆண்டு இசிபதன கல்லூரியும், 1992ஆம் ஆண்டு தர்ஸ்டன் கல்லூரியும் வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தன. ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் முடிவு காணப்பட்டுள்ளன. இதில் 5 போட்டிகளில் தர்ஸ்டன் கல்லூரியும், 4 போட்டிகளில் இசிபதன கல்லூரியும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சகோதரர்களின் சமரில் இசிபதன கல்லூரியின் சமன் நிஷாந்த, ஒரு இன்னிங்ஸில் வீரரொருவர் பெற்றுக்கொண்ட அதிபட்ச ஓட்டமாக ஆட்டமிழக்காது 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அதேநேரம், இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளரான இசிபதன கல்லூரியின் நுவன் சொய்சா, 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சகோதரர்களின் சமரில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சுப் பிரதியாகவும் அமைந்தது.

தர்ஸ்டன் கல்லூரி

2017/2018 பாடசாலை கிரிக்கெட் பருவகாலத்திற்காக விளையாடி வருகின்ற தர்ஸ்டன் கல்லூரிக்கு நிபுன் லக்ஷான் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இதுவரை நடைபெற்ற 13 போட்டிகளில் அவ்வணி 3இல் வெற்றியையும், 7 போட்டிகளை சமநிலையில் நிறைவுக்கு கொண்டு வந்தும் உள்ளது.

அதேநேரம், இம்முறை பருவகாலத்தில் அக்கல்லூரிக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக சவன பிரபாஷ்கே(616 ஓட்டங்கள்) விளங்குகிறார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அதிரடியைக் காண்பித்து வரும் சவனவின் பங்களிப்பு நிச்சயம் இம்முறை சகோதரர்களின் சமரில் தர்ஸ்டன் கல்லூரிக்கு மிகப் பெரிய பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை டுபாயில் ஆரம்பமாகும் 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 தொடர்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 3ஆவது பருவகால பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்)…

அத்துடன், இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள அவ்வணியின் சந்தரு டயஸ் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக வலம்வருவதுடன், அணித் தலைவர் நிபுன் லக்ஷான் 36 விக்கெட்டுக்களையும், அயேஷ் ஹர்ஷன 35 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி முன்னணியில் உள்ள பந்துவீச்சாளர்களாக இம்முறை போட்டியில் தர்ஸ்டன் கல்லூரிக்காக களமிறங்கவுள்ளனர்.

தர்ஸ்டன் கல்லூரி அணி விபரம்

நிபுன் லக்ஷான்(அணித் தலைவர்), யெஷான் விக்ரமஆரச்சி, நிமேஷ் லக்ஷான், இமேஷ் விரங்க, சவன் பிரபாஷ், நிமேஷ் பெரேரா, அயேஷ் ஹர்ஷன, ஷலக பண்டார, பன்சிலு தேஷான், அனுஷ்க பெர்ணாந்து, ஜயவிஹன் பிரதீப்த, பிம்சர ரணதுங்க, தினெத் பிரபுத்த, பவன்த ஜயசிங்க, ரஷ்மிக ரவிஹார, அவிஷ்க கௌஷல்ய, யஹன் சசித, சுனெத் குணதிலக, சந்தரு டயஸ்

இசிபதன கல்லூரி

2017/2018 பருவகாலத்தில் இசிபதன கல்லூரிக்கு இதுவரை நடைபெற்ற போட்டிகளின்படி எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை. இதன்படி, 12 போட்டிகளில் விளையாடிய இசிபதன கல்லூரி, ஒரேயொரு வெற்றியையும், 8 போட்டிகளில் சமநிலையிலும் முடித்துக் கொண்டதுடன், 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

எனினும், 8 போட்டிகளில் பங்குபற்றி 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ள இக்கல்லூரியின் அயன சிறிவர்தன, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக வலம்வருவதுடன், சன்ஜுல பண்டார மற்றும் லெஷான் அமரசிங்க ஆகியோர் தலா 370 ஓட்டங்களைக் குவித்துள்ள அதேநேரம், பாடசாலை அரங்கில் மற்றுமொரு அனுபவமிக்க வீரரான சன்ஜுல அபேவிக்ரம 350 ஓட்டங்களையும் குவித்துள்ள நிலையில் அவ்வணிக்காக துடுப்பாட்டத்தில் வலுசேர்க்கவுள்ளனர்.

காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆனந்த மற்றும் திரித்துவக் கல்லூரிகள்

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடாத்தப்படும் 2017/2018 பருவ காலத்திற்கான 19 வயதின் கீழ் டிவிஷன் 1 …

அத்துடன், 12 போட்டிகளில் 46 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள மதுஷிக சந்தருவன், அணிக்காக அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராக வலம்வருகின்ற அதேநேரம், அவ்வணியின் தலைவராக அயன சிறிவர்தன 37 விக்கெட்டுக்களையும், சன்ஜுல பண்டார 25 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி பந்துவீச்சில் அசத்தி வருகின்றதால் இம்முறை சகோதரர்களின் சமரில் எதிரணிக்கு அச்சுறுத்தலைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இசிபதன கல்லூரி அணி விபரம்

அயன சிறிவர்தன(அணித் தலைவர்), சன்ஜுல அபேவிக்ரம, சன்ஜுல பண்டார, லெஷான் அமரசிங்க, அனுபம ஹேரத், தினத் திஸாநாயக்க, தெவிது திக்வெல்ல, மதுஷிக சந்தருவன், எஷான் பெர்ணாந்து, சவிந்து உத்சர, கலீக் அமாத், மலிந்த அபிஷேக், அஷேன் லக்ஷித, சவீன் தன்த, மெனுர பெரேரா, ரசுல விக்சுர, ஷாமிக விக்ரமதிலக

எனவே இவ்விரு பாடசாலைகளும் இம்முறை பருவகாலத்தில் பங்குபற்றிய போட்டிகளின் முடிவுகளையும், வீரர்களின் திறமைகளையும் ஒப்பிடும்போது தர்ஸ்டன் கல்லூரிக்கு இம்முறை சகோதரர்களின் சமரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்பட்டாலும், எதுவும் நிச்சயமற்ற கிரிக்கெட் விளையாட்டில் இசிபதன கல்லூரியின் மீள்வருகையும், அபார ஆட்டமும் அவ்வணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இறுதியாக

எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ள 55ஆவது சகோதரர்களின் சமரை ThePapare.com, Dialog Tv வாயிலாகவும், Chenal 01 மற்றும் My Tv வாயிலாகவும் நேரடியாக கண்டுகளிக்க முடியும்.

அத்துடன், இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com வாயிலாக போட்டிகளின் நேரடி அஞ்சல், புகைப்படங்கள், அறிக்கைகள், விசேட கட்டுரைகள் என்பவற்றை பெற்றுக்கொள்ளவும் முடியும்.