பங்களாதேஷ் அணிக்கு புதிய தலைவர்

Bangladesh Cricket

233

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவராக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நஜ்முல் ஹுசைன் செண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டதுடன், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவுசெய்திருந்தது.

>> ஜெதர்சனின் அபார பந்துவீச்சினால் சம்பியனானது சட்டத்தரணிகள் அணி

முதல் இரண்டு போட்டிகளில் பங்களாதேஷ் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்திருந்த போதும், மூன்றாவது போட்டியில் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள முன்னணி வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

முதல் போட்டியில் அணித்தலைவராக செயற்பட்டிருந்த லிடன் டாஸ் மற்றும் தமிம் இக்பால் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹஸன் மிராஸ், டஸ்கின் அஹ்மட் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை முதல் போட்டியில் அணிக்கு முக்கியமான இணைப்பாட்டம் ஒன்றை பதிவுசெய்திருந்த மஹ்மதுல்லாஹ் தொடர்ந்தும் அணியில் இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

பங்களாதேஷ் குழாம்

நஜ்முல் ஹுசைன் செண்டோ (தலைவர்), டன்ஷிட் ஹஸன் தமிம், ஸகீர் ஹஸன், அனாமுல் ஹக் பிஜோய், தவ்ஹித் ரிடோய், மஹ்மதுல்லாஹ் ரியாத், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹஸன் மிராஸ், நசும் அஹ்மட், டஸ்கின் அஹ்மட், சொரிபுல் இஸ்லாம், ஹஸன் மஹ்மூட், ரிஷான் ஹொஷைன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<