சயீட் அன்வரின் 24 வருட சாதனையை முறியடித்த ஷான் மசூத்

224
shan masood
PCB

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷான் மசூத் சதமடித்து அசத்தினார்.

இதன்மூலம் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் 24 வருடங்களுக்குப் பிறகு சதம் அடித்த பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை ஷான் மசூத்  படைத்தார்

சச்சினின் துடுப்பு மட்டையால் 37 பந்துகளில் சதமடித்த அப்ரிடி

இங்கிலாந்துபாகிஸ்தான் அணிகள் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டெஸ்ட் மான்செஸ்டர் நகரில் கடந்த 5ஆம் திகதி ஆரம்பமாகியது. பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பத்தில் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. 

அதன்பின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷான் மசூத், பாபர் அசாம் சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர். பாபர் அசாம் 69 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 176 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

அடுத்து சதாப் கான் உடன் இணைந்து கூட்டணி அமைத்த ஷான் மசூத் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 251 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். இந்த ஆட்டம் மூலம் ஷான் மசூத் இங்கிலாந்து மண்ணில் முக்கிய சில சாதனைகளை படைத்துள்ளார்.

video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126

இங்கிலாந்து மண்ணில் 1996க்கு பின் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கும் முதல் பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஷான் மசூத் இடம்பிடித்தார். அவருக்கு முன்னதாக சயீட் அன்வர் 1996இல் சதம் அடித்து 176 ஓட்டங்களைக் குவித்தார்

மேலும், இங்கிலாந்து மண்ணில் சதம் அடிக்கும் ஐந்தாவது பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் அவர் இடம்பிடித்தார். முன்னதாக மொசின் கான் (200 ஓட்டங்கள், லோர்ட் 1982), முடாசர் நாசர் (124 ஓட்டங்கள், எட்ஜ்பெஸ்டன் 1987), ஆமிர் சொஹைல் (205 ஓட்டங்கள், மான்செஸ்டர் 1992), சயீட் அன்வர் (176 ஓட்டங்கள், ஓவல் 1996) ஆகியோர் சதமடித்திருந்தனர்.

இங்கிலாந்துக்கு எதிராக அசத்திய ஷான் மசூத், டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக 3ஆவது சதத்தைப் பதிவு செய்தார். சமீபத்தில் இலங்கை (135 ஓட்டங்கள், கராச்சி 2019), பங்களாதேஷ் (100 ஓட்டங்கள், ராவல்பிண்டி 2019) அணிகளுக்கு எதிராக சதமடித்திருந்தார்

பாகிஸ்தான் அணியுடன் இணையும் ஹாரிஸ் ரவூப்

இதன்மூலம், பாகிஸ்தான் அணிக்காக தொடர்ந்து மூன்று டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றார். இதே பட்டியலில் இடம் பெற்ற இரண்டாவது பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் ஷான் மசூத் இடம்பிடித்துள்ளார்

அதுமட்டுமின்றி, சயீட் அன்வருக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 200 பந்துகளுக்கும் மேல் சந்தித்த முதலாவது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய ஷான் மசூத், 319 பந்துகளில் 156 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம், டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்ஸில் தனது அதிகபட்ச ஓட்டங்களை அவர் பதிவு செய்தார்

இதன்படி, ஷான் மசூத் மற்றும் பாபர் அசாமின் அபார ஆட்டத்தினால் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க