பங்களாதேஷ் அணியின் தலைவராக சகீப் அல் ஹசன் நியமனம்!

Asia Cup 2022

350

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20I உலகக்கிண்ணம் நிறைவடையும்வரை பங்களாதேஷ் அணியின் தலைவராக அனுபவ வீரர் சகீப் அல் ஹசன் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜ்முல் ஹஸனுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், சகீப் அல் ஹசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சுழல் பந்துவீச்சு நாயகன் பிரபாத் ஜயசூரியவை பாராட்டும் மஹேல

ஆசியக்கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, அணியின் தலைவராக சகீப் அல் ஹசன் செயற்படவுள்ளமையையும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் குழாத்தின் தலைவராக சகீப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முக்கியமான மாற்றமாக முன்னணி துடுப்பாட்ட வீரர் லிடன் டாஸ் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் முஷ்பிகூர் ரஹீம், சபீர் ரஹ்மான், எப்டொட் ஹுசைன் மற்றும் மொஹமட் சய்புதீன் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் முனியம் சஹாரியர், நஷ்முல் ஹுசைன் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோருக்கு குழாத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில், உபாதை காரணமாக ஆசியக்கிண்ண குழாத்திலிருந்து நீக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நூருல் ஹாஸன் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆசியக்கிண்ணத்தொடர் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

சகீப் அல் ஹசன் (தலைவர்), அனாமுல் ஹக் பிஜோய், முஷ்பிகூர் ரஹீம், அபிப் ஹுசைன், மொஸ்டாக் செய்கட், மஹ்முதுல்லாஹ் ரியாத், செயிக் மெஹிடி, மொஹமட் சய்புதீன், ஹசன் மஹ்முட், முஷ்தபிசூர் ரஹ்மான், நசும் அஹ்மட், சபீர் ரஹ்மான், மெஹிதி ஹாசன் மிராஷ், எப்டொட் ஹுசைன், பர்வெஷ் ஹொசைன் இமோன், நூருல் ஹாஸன் சொஹான், டஸ்கின் அஹ்மட்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<