தென்னாபிரிக்க தொடருக்கு முன்னாயத்தமாக செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம்

63

இம்மாத இறுதிப்பகுதியில் நடைபெறவிருக்கும் இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கெடுப்பதற்கு முன்னாயத்த பயிற்சிகளை மேற்கொள்ள 10 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் வீரர்கள் குழாம் தென்னாபிரிக்கா பயணமாகியுள்ளது. 

தென்னாபிரிக்க தொடருக்காக இலங்கை அணியுடன் இணையும் வீரர்

நேற்று (11) இரவு இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தனன்ஞய டி சில்வா உள்ளடங்கலாக குறிப்பிட்ட குழாம் தென்னாபிரிக்காவிற்கு பயணமாகியிருப்பதுடன் அவர்கள் அனைவரும் டர்பன் நகரில், தென்னாபிரிக்க கிரிக்கெட் பயிற்சியாளர் நெயில் மெக்கன்சியுடன் இணைந்து முன்னயத்த பயிற்சி முகாமில் பங்கெடுக்கவிருக்கின்றனர் 

இலங்கை கிரிக்கெட் அணிக்கு .சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதனால் குறிப்பிட்ட வாய்ப்பினை பெறும் நோக்கிலேயே, இலங்கை வீரர்கள் தென்னாபிரிக்கா சென்று குறிப்பிட்ட டெஸ்ட் தொடருக்கான ஆயத்தங்களை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது 

மறுமுனையில் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் எஞ்சிய இலங்கை வீரர்கள் குழாமானது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் பின்னர் இம்மாதம் 22ஆம் திகதி தென்னாபிரிக்கா பயணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 

இலங்கைதென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இம்மாதம் 27ஆம் திகதி டர்பனில் நடைபெறுவதோடு, இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 05ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

தென்னாபிரிக்கா பயணமாகிய இலங்கை டெஸ்ட் குழாம் 

 

தனன்ஞய டி சில்வா, திமுத் கருணாரட்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், லஹிரு குமார, பிராபத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், மிலான் ரத்நாயக்க, கசுன் ராஜித, லசித் எம்புல்தெனிய 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<