பாக் கிரிக்கெட் சபையை அச்சுறுத்தும் அதிரடி வீரர் அப்ரிடி

606
Shahid Afridi

பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பது குறித்து ஓய்வு பெற்ற பின்னர் வெளியிடுவேன் என பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மற்றும் பாகிஸ்தான்  டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் ஷஹீத் அப்ரிடி செய்தி சேவை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

அந்நாட்டு கிரிக்கெட் நிறையத் தவறுகளை கொண்டுள்ளது என்றும் வீரர்களின் தரம் சர்வதேச அளவில் சிறந்திருக்கவில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணியில் உள்ள வீரர்களைக் குறித்து சாடியுள்ளார் அப்ரிடி.

இது பற்றி பி.பி.சி. உருது தொலைக்காட்சி சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணியில் உள்ள சில வீரர்களை விட சிறந்த முறையில் விளையாடினேன் என உணர்ந்தேன். அதனால் .சி.சி. டி20 உலக கிண்ண  போட்டிக்கு பின் தலைமை பதவியில் இருந்து ஓய்வு பெறவில்லை.  அணியில் இருந்து விலகும்பொழுது அது தகுதியுடைய ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.

நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோச நிலையில் உள்ளது என்பது குறித்து ஓய்வு பெற்ற பின்னர் வெளியிடுவேன் என உறுதிபட கூறிய அப்ரிடி, அதிக தகவல்களை கூற விரும்புகிறேன் என்றும் ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் உள்ள தொடர்பினால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்