கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் இரண்டு வீரர்கள் மோதல்

2612
Caribbean Premier League

வருடாந்தம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரிபியன் பிரிமியர் லீக் தொடர் இந்த வருடமும் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்றைய டை்ரைடன்ட்ஸ் மற்றும் போட்ரியோட்ஸ் அணிகளுக்கெதிரான போட்டியில் ஜே.ஜே.ஸ்மாட்ஸ் மற்றும் கிரான் பவேல் ஆகிய  இரண்டு வீரர்கள் களத்தடுப்பின் போது மோதுண்டு வீழ்ந்ததில் ஒருவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல்சாரி ஜோசப் வீசிய பந்தை அதிரடி ஆட்டக்காரர் .பி.டி வில்லியர்ஸ் அடிக்க பந்து டீப் மிட் ஒப் திசையினுடாக எல்லைக் கோட்டிற்கு செல்ல பந்தினை பிடியெடுக்கச் சென்ற போட்ரியோட்ஸ் அணியின் ஜே.ஜே.ஸ்மாட்ஸ் மற்றும் கிரான் பவேல் ஆகியோர் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் சுருண்டு மைதானத்தில் வீழ்ந்தனர்

இதன்போது உபாதைக்குள்ளான நிலையில் பவேல் உடனடியாக அம்யுலன்ஸ் வாகனத்தின் மூலமாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்