மீண்டும் பங்களாதேஷ் அணியில் இணையும் சபியுல் இஸ்லாம்

192
ICC

உபாதைக்குள்ளான தஸ்கின் அஹமட்டின் ஒருநாள் குழாமின் வெற்றிடத்திற்கு இரண்டரை வருடங்களுக்கு பின்னர் ஒரு வீரரும், டெஸ்ட் குழாத்தின் வெற்றிடத்திற்கு சர்வதேச அரங்கிற்கு அறிமுக வீரர் ஒருவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.  

இந்திய – அவுஸ்திரேலிய டி20 தொடர் அட்டவணையில் மாற்றம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெங்களூரு …

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு நியூஸிலாந்து அணியுடன் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகள் என்பவற்றில் விளையாடவுள்ளது.

குறித்த தொடரானது எதிர்வரும் 13ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 16ஆம் திகதி வரை ஒரு மாத காலப்பகுதியில் நியூஸிலாந்தின் பல்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான இரு அணிகளினதும் குழாம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பங்களாதேஷ் அணியில் இரு போட்டிகளுக்குமான குழாமில் ஒவ்வொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியின் பின்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அஹமட் திடீரென உபாதைக்குள்ளாகியுள்ளார். பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் சில்ஹெட் சிக்ஸர்ஸ் மற்றும் சிட்டகொங் வைகிங்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற போட்டியின் போது தஸ்கின் அஹமட் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் கணுக்கால் உபாதைக்கு உள்ளானார்.

இவர் குறித்த உபாதையிலிருந்து மீண்டு வருவதற்கு நான்கு அல்லது ஆறு வாரங்கள் தேவைப்படுமென பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான மின்ஹாஜூல் அபீடின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவரின் குறித்த உபாதை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருநாள் தொடருக்கு பங்களாதேஷ் ப்ரிமியர் லீக்கில் பிரகாசித்த ஒரு வீரரரும், டெஸ்ட் தொடருக்கு அறிமுக வீரர் ஒருவரும் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கு பங்ளாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக பிரகாசித்த 29 வயதுடைய இளம் வேகப்பந்து வீச்சாளரான சபியுல் இஸ்லாம் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

56 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 63 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இவரது ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சு சராசரி 36.35 சதவீதமாகும்.

மேலும் தஸ்கின் அஹமட்டின் டெஸ்ட் குழாமின் வெற்றிடத்துக்காக 25 வயதுடைய எபாதத் ஹூசைன் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுக வீரராக இணைக்கப்பட்டுள்ளார். 19 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள எபாதத் ஹூசைன் 59 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இவரின் டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 28.94 சதவீதமாகும்.

டி20 தொடரிலிருந்து மார்டின் குப்டில் வெளியேற்றம்

இந்திய அணியுடனான டி20 தொடரிலிருந்து உபாதையால் ….

இவர் தற்போது அந்நாட்டில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ்நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரு தரப்பு தொடரில் முதல் தொடரான ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி நேப்பியரில் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷ் ஒருநாள் குழாம்

மஸ்ரபீ மொடர்ஸா (அணித் தலைவர்), சகீப் அல் ஹசன், தமீம் இக்பால், லிட்டன் தாஸ், சௌமியா சர்கார், முஸ்பிகுர் ரஹீம், முஹம்மட் மிதுன், மஹ்மதுல்லாஹ், சபீர் ரஹ்மான், மெஹ்தி ஹசன், முஸ்தபீசுர் ரஹ்மான், ரூபல் ஹூஸைன், முஹம்மட் ஸைபுதீன், நயீம் ஹசன், சயுஉல் இஸ்லாம்.

பங்களாதேஷ் டெஸ்ட் குழாம்

சகீப் அல் ஹசன் (அணித்தலைவர்), மொஹமதுல்லாஹ், தமீம் இக்பால், சத்மன் இஸ்லாம், மொமினுல் ஹக், முஹம்மட் மிதுன், முஸ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், மெஹ்தி ஹசன், தைஜூல் இஸ்லாம், முஸ்தபீசுர் ரஹ்மான், அபூ ஜெயிட் ராஹி, செய்ட் காலித் அஹமட், நயீம் ஹசன், எபாதத் ஹூசைன்       

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<