சேனநாயக்கவிற்கு அபராதம்

8050
Sachithra Senanayake

நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் சச்சித்திர சேனாநாயவிற்கு போட்டி ஊதியத்தில் 30% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று  கண்டி பல்லேகளே மைதானத்தில்  இடம்பெற்ற அவுஸ்ரேலியஇலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் 1ஆவது போட்டியின் போதே சச்சித்திர சேனாநாயவிற்கு இந்த 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் சச்சித்திர சேனாநாயக  சர்வதேச கிரிக்கட் சபையின் 2.1.7 என்ற விதி முறையில் கூறப்பட்டிருக்கும் மொழி, செயல்கள் அல்லது துடுப்பாட்ட வீரரை கேவலப்படுத்தி அல்லது சைகைகள் பயன்படுத்தி ஆக்கிரோஷமான எதிர்வினை தூண்டக்கூடும் செயல்களை மீறிய குற்றச் சாட்டிற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய 1ஆவது டி20 போட்டியின் போது இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் அவுஸ்ரேலிய அணியை துடுப்பாட்ட அழைப்பு விடுத்தது. இதன் படி அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடிய வேளையில் போட்டியின் 5ஆவது ஓவரை வீசிய சச்சித்திர சேனாநாயக  அவுஸ்ரேலிய அணித் தலைவர் மற்றும் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரை  16 பந்துகளில் 5 பவுண்டரி அடங்கலாக 28 ஓட்டங்களை பெற்ற இருந்த  நிலையில்  போல்ட் முறையில் ஆட்டம் இழக்கச் செய்து இருந்தார்.  அதன் பின் சச்சித்திர சேனாநாயக தகாத வார்த்தைகளைக் கூறி டேவிட் வோர்னரை சினங் கொள்ளச் செய்து இருந்தார் என்ற குற்றச் சாட்டிற்காக 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்ட்டுள்ளார்.

இந்த அபராத கட்டணங்களை ஆடுகள நடுவர்களான ரன்மோர் மார்டினஸ், ரவீந்திர விமலசிறி 3ஆம் நடுவர் ருச்சிரா பல்லியகுருகே  மற்றும் 4ஆவது நடுவர் டீபால் குணவர்தன ஆகியோர் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்டு டையர் டெஸ்ட்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய கிரிக்கெட் சபையின் முடிவினை வரவேற்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச அணிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

எவ்வாறாயினும்  இந்த தீர்மானத்தின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கி இருக்கும் அணிகளுக்கு  தீங்கு ஏற்படுவதோடு, ரசிகர்களின் ஆர்வம் குறைந்து வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும்  என்ற காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் சபை குறித்தடு டையர் டெஸ்ட்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதேவேளை குறித்தடு டையர் டெஸ்ட்முறைக்கு இந்திய கிரிக்கெட் சபையும் தமது எதிர்ப்பினை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.

டு டையர் டெஸ்ட்”  முறைக்கு இந்திய கிரிக்கெட் சபை எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை கிரிக்கெட் சபைக்கு தமது ஆதரவினை வெளியிட்டுள்ளதால்   தமது வரவேற்பை தெரிவித்துக்கொள்வதாக  இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க டெஸ்ட் போட்டிகளை இரண்டு பிரிவாக மாற்றும் திட்டத்துக்கு, சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக, சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், இவ்விடயம் தொடர்பான கவனம், மேலும் அதிகரித்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளை இரண்டு பிரிவுகளாக்கி, அவற்றில் முதற்பிரிவில் முதல் 7 அணிகளும், இரண்டாவது பிரிவில் 5 (அல்லது வேறு எண்ணிக்கையான) அணிகள் விளையாடும் திட்டமொன்று தொடர்பாகப் பரிசீலிக்கப்படுகிறது.

ஆனால், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகள், இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், சிறிய நாடுகளை இது பாதிக்குமெனத் தெரிவித்து, இந்தியாவும் இத்திட்டத்தை எதிர்க்கிறது.

ஆனால், வீரர்களின் சம்மேளனத்தின் வருடாந்த கருத்துக்கணிப்பின்படி, 72 சதவீதமான வீரர்கள், இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

தவிர, 52 சதவீதமான வீரர்கள், தங்கள் நாட்டுக்காக விளையாடுவதற்குப் பதிலாக, உள்ளூர் இருபதுக்கு-20 தொடரொன்றில் விளையாடுவதைப் பரிசீலிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.