ஜேர்சி இலக்கம் 7 ஏன்? காரணத்தை வெளிப்படுத்திய டோனி!

Indian Cricket

42
Indian Cricket

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி 7ம் இலக்கத்தை கொண்ட ஜேர்சியை தெரிவுசெய்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றிய பின்னர், தன்னுடைய ஜேர்சி இலக்கத்தை 800 ஆக மாற்றிக்கொண்டார். மே.தீவுகளின் கிரிஸ் கெயில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 333 ஓட்டங்களை குவித்த பின்னர், தன்னுடைய ஜேர்சி இலக்கத்தை 333 ஆக மாற்றிக்கொண்டார்.

>>ஆப்கான் தொடரிலிருந்து விலகும் துஷ்மந்த சமீர?<<

எனினும் மகேந்திரசிங் டோனி ஆரம்பத்தில் தெரிவுசெய்த 7 என்ற ஜேர்சி இலக்கத்தை இதுவரையிலும் மாற்றிக்கொள்ளவில்லை. தன்னுடைய ஜேர்சி இலக்கம் தொடர்பில் விளம்பர நிகழ்வொன்றில் மகேந்திரசிங் டோனி கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “நான் பூமிக்கு வருவேன் என்று என் பெற்றோர் முடிவு செய்த நேரம் அல்லது நாள் ஜூலை 7ம் திகதி. ஜூலை 7 ஆம் திகதி நான் பிறந்தேன். அதுமாத்திரமின்றி ஜூலை ஏழாவது மாதம். 1981 ஆண்டு பிறந்தேன்.  எட்டிலிருந்து ஒன்றை கழித்தால் ஏழு. எனவே என்னிடம் ஜேர்சி இலக்கத்தை கேட்ட போது, இதனை (7) தெரிவுசெய்வதற்கு எளிதாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபையானது டோனியுடைய ஓய்வை தொடர்ந்து, ஏழாம் இலக்கத்துக்கும் ஓய்வை வழங்கியது. இதன்காரணமாக எதிர்கால இந்திய கிரிக்கெட் வீரர்கள் 7ம் இலக்கத்தை தெரிவுசெய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<