இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய கொக்குவில் இந்து, யாழ். மத்தி அணிகள்

U19 Schools Cricket 2022

159

பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 3 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) யாழ். மாவட்ட பாடசாலைகளான யாழ். மத்திய கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிகள் தகுதிபெற்றுள்ளன.

இம்முறை ஒருநாள் போட்டிகளாக நடைபெற்ற இந்த தொடரில் யாழ். மாவட்ட டிவிஷன் 3 பாடசாலை அணிகள் K குழுவில் இடம்பெற்றிருந்த நிலையில், யாழ். மத்தியக் கல்லூரி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது.

>>மோசமான ஆட்டத்தினால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சென்.ஜோன்ஸ் கல்லூரி

போட்டித்தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய யாழ். மத்தியக் கல்லூரி அணி அனைத்து போட்டிகளிலும் இலகுவான வெற்றிகளை பதிவுசெய்து இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அதேநேரம், இந்த குழுவில் பிரகாசித்து இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரி அணியும் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

யாழ். மத்திய கல்லூரி அணி தங்களுடைய இரண்டாவது சுற்றில் கொழும்பு டி ல சல் கல்லூரியை எதிர்கொண்டு விளையாடவுள்ள நிலையில், கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினர், மொறட்டுவை மெத்தடிஸ்ட் கல்லூரி அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.

இந்தநிலையில் மேற்குறிப்பிட்ட யாழ். மத்தியக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிகள் விளையாடவுள்ள இரண்டாவது சுற்றுப்போட்டிக்கான திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<