சம்பியன் பட்டம் வென்றது சானியா – ஹிங்கிஸ் ஜோடி

240
Shania & Hingis Source Twitter

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் சம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சானியா மிர்ஸா மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மார்டினா ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று 14ஆவது பட்டத்தை ருசித்தது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா – மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, மகரோவா மற்றும் வெஸ்னினா ஜோடியை எதிர் கொண்டது. இதன் முதல் செட்டை சானியா ஜோடி 6–1 என எளிதில் கைப்பற்றியது. ஆனால், எதிர் ஜோடி 2ஆவது செட் டில் சிறப்பாக விளையாடியது. இதனால் சானியா ஜோடி அந்த செட்டை 6–-7 என இழந்தது.

ஆனால், வெற்றி ஜோடியான சானியா – ஹிங்கிஸ் ஜோடி 3ஆவது செட்டில் aசிறப்பாக விளையாடி அந்த செட்டை 10 – 3 எனக் கைப்பற்றியது. இதன் மூலம் சானியா – ஹிங்கிஸ் ஜோடி 14ஆவது பட்டத்தை வென்றுள்ளது. அத்தோடு இவ்வருடம் இந்த ஜோடி பெற்ற 5ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும் என்பது ஒரு முக்கிய அம்சாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்