தலையில் பந்து தாக்கியதால் CT ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சதீர சமரவிக்ரம

1010
Image Courtesy - BCCI

டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் போவர்ட் சோர்ட் லெக் (Forward short leg) திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது தலைக்கவசத்தில் பந்து தாக்கியதால் CT ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சதீர சமரவிக்ரமவுக்கு ஓய்வெடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் நாளில் டில்ருவன் பெரேரா 30 ஆவது ஒவரின் கடைசிப் பந்தை ஓன் சைட் (On-side) பக்கமாக வீசியபோது முரளி விஜய் அதனை தட்டிவிட்டார். அது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதீரவை தாக்கியது.

பந்து தாக்கிய பின்னரும் சதீர மைதானத்தில் இருந்த நிலையில் தலையில் பந்து தாக்கி இருப்பதால் ஒரு முன்னெச்சரிக்கையாக நடுவர் நிகெல் ல்லொங் இலங்கை உடற்பயிற்சி நிபுணரை அழைத்து அவரை சோதனை செய்ய கோரினார். அவர் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதோடு CT ஸ்கேன் மூலம் ஆபத்தான நிலையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எவ்வாறாயினும் அவர் போட்டியின் எஞ்சிய நாட்களில் களமிறங்குவது குறித்து சந்தேகம் உள்ளது.   

கோஹ்லி – விஜய் இணைப்பாட்டம் மூலம் இந்திய அணி அபார

இது தொடர்பில் இலங்கை அணியின் முகாமையாளர் கூறியதாவது, “அவரது தலையில் (பந்து) தாக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு முன்னெச்சரிக்கையாக ஸ்கேன் சோதனை செய்தோம். அனைத்தும் சரியாக உள்ளது. எனினும் இன்று (02) இரவு நாம் அவரை அவதானித்து விட்டு மருத்துவர்கள் நாளை காலை அவரை பார்வையிட்டபின் நாளை அவர் விளையாடுவாரா அல்லது இல்லையா என்பதை தீர்மானிப்போம். அவர் உடைமாற்றும் அறைக்கு திரும்பிவிட்டார். என்றபோதும் முடிவொன்றை எடுப்பதில் அதிக கவனமாக உள்ளோம். எனவே, நாளை காலை வரை அவரை அவதானிப்போம். தற்போதிலிருந்து மருத்துவ ஆலோசனைப்படி நாம் செயற்படுவோம்” என்றார்.   

இரண்டு போட்டிகளில் முரளி விஜய்யின் அதிரடி துடுப்பாட்டத்தால் சமரவிக்ரம இவ்வாறான ஆபத்தான நிலைக்கு முகம்கொடுப்பது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும். நாக்பூரில் ரங்கன ஹேரத்தின் பந்துக்கு விஜய் ஸ்வீப் முறையில் பந்தை அடித்தபோது அது சமரவிக்ரமவின் நெஞ்சுப் பகுதியை தாக்கியது. அப்போது மைதானத்தில் இருந்து வெளியேறி எக்ஸ் ரேய் சோதனை செய்து பார்த்ததில் அவரது விலா எலும்பில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது.