ரஹானே சதம், இனிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா மேற்கிந்திய அணி?

216
CRICKET INDIA v INDIES

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. மேற்கிந்திய தீவுகள் முதல் இனிங்ஸில் 196 ஓட்டங்களோடு சுருண்டது. பிளாக்வுட் 62 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டங்களாக எடுத்தார். அஸ்வின் 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இனிங்ஸை விளையாடிய இந்தியா முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை  எடுத்து இருந்தது. ராகுல் 75 ஓட்டங்களோடும், புஜாரா 27 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை(31) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ராகுல் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 182 பந்துகளில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 100 ஓட்டங்களை  எடுத்தார். 6-வது டெஸ்டில் விளையாடும் ராகுலுக்கு இது 3-வது சதமாகும்.

ராகுல் 158 ஓட்டங்களைக்  குவித்து ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கட்டுகள் இழப்புக்கு 358 ஓட்டங்களைல்  குவித்து இருந்தது.

நேற்று 3ஆவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடி இந்தியா, 9 விக்கட்டுகளை இழந்து 500 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. ராஹானே 108 ஓட்டங்களை  எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ்டன் சேஸ் 5 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி தமது ஆட்டத்தை நிறுத்திய பின் போட்டியில் மழை பெய்தது. இந்த மழை இறுதி வரை தொடந்ததால் போட்டியின் 3ஆவது நாள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி 304 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸைத் தொடரவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 196/10

ப்ளாக்வூட் 62, சாமுவேல்ஸ 37 கமின்ஸ் 24*,

ரவி அஷ்வின் 52/5, மொஹமத் ஷமி 23/2, இஷாந்த் சர்மா 53/2

இந்தியா – 500/9d

லோகேஷ் ராஹுல் 158, ரஹானே 108*, ஷா 47, புஜாரா 46, கோஹ்லி 44,

செஸ் 121/5

இந்திய அணி 304 ஓட்டங்கள் முன்னிலையில்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்