பங்களாதேஷ் T20I அணியின் உப தலைவராகும் இளம் வீரர்

Bangladesh Cricket

13
Saif Hassan

பங்களாதேஷ் T20I கிரிக்கெட் அணியின் உப தலைவராக இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சயீப் ஹஸன் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அனைத்துவகை போட்டிகளுக்குமான தலைமைத்துவ நியமனங்கள் தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

>>பாகிஸ்தான் முத்தரப்பு T20i தொடரில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைப்பு <<

இதில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான உப தலைவர்களாக முறையே மெஹிதி ஹாஸன் மிராஷ், நஜ்முல் ஹுசைன் செண்டோ மற்றும் சயீப் ஹஸன் ஆகியோரை நியமித்துள்ளது.

இளம் வீரரான சயீப் ஹஸன் அண்மைக்காலமாக T20I போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவரும் நிலையில், இவர் அணியின் தலைமைத்துவ கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் டெஸ்ட் அணியின் தலைவரான செண்டோ ஒருநாள் போட்டிகளுக்கான உப தலைவராக செயற்படவுள்ளதுடன், மெஹிதி ஹாஸன் மிராஷ் தலைவராக செயற்படுகின்றார். அத்துடன், டெஸ்ட் போட்டிகளுக்கான உப தலைவராக மெஹிதி ஹாஸன் செண்டோவின் கீழ் செயற்படவுள்ளார்.

T20I போட்டிகளை பொருத்தவரை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணம் வரை லிடன் டாஸ் தலைவராக செயற்படுவார் என பங்களாதேஷ கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<