ஒற்றுமையும், தன்னம்பிக்கையுமே இலங்கை அணியின் வெற்றிக்கு காரணம்

100
unity and confidence of the young players
@PCB

ஒற்றுமையும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்காலம் என்பதை பாகிஸ்தான் அணியுடனான T20i தொடர் வெற்றியின் மூலமாக நிரூபித்துக் காட்டியதாகத் தெரிவித்த இலங்கை T20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க, இந்த இளம் வீரர்களுடனேயே நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த இளம் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று..

இதேநேரம், 1996 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய மைதானத்திலேயே T20i தொடரையும் வெல்ல கிடைத்தமை தமது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வெற்றியாகவும் அமைந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.  

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று (09) நடைபெற்ற 3ஆவது T20i போட்டியிலும் 13 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றியீட்டியது. ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், T20i தொடரில் இளம் வீரர்களின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி முதன்முறையாக பாகிஸ்தானை வைட்வொஷ் முறையில் வீழ்த்தி T20i தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.   

இந்நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை அணியின் வெற்றி குறித்து பேசிய அணித் தலைவர் தசுன் ஷானக்க

”உண்மையில் எனது அணி குறித்து மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது. நாங்கள் இதே மைதனானம், இதே ஆடுகளத்தில் தான் 1996 உலகக் கிண்ணத்தை வென்றெடுத்தோம். 2017ஆம் ஆண்டும் இதே ஆடுகளத்தில் நான் சிறப்பாக விளையாடியிருந்தேன். எனவே, இந்த தொடரைக் கைப்பற்ற முடியும் என என் மீதும், எனது அணி மீதும் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது

10 ஓவர்களின் பின் எம்மால் சிறந்த தருணமொன்றை பெற முடியவில்லை – சர்பராஸ்

நேற்று (9) லாஹூரில் இடம்பெற்று முடிந்திருக்கும் மூன்றாவது T20i..

அதேபோல, இந்தத் தொடருக்கு வரமுன் நாங்கள் நியூசிலாந்து அணிக்கெதிராக பல்லேகல மைதானத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். அங்கு பெற்றுக்கொண்ட உத்வேகம் தான் இன்று நாங்கள் பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அந்தத் தொடரிலும் ஒருசில இளம் வீரர்கள் தான் விளையாடியிருந்தனர். அந்த அணியில் இருந்த வீரர்கள் தான் இந்தத் தொடரிலும் விளையாடினார்கள்.  

அத்துடன், அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து வைத்துள்ளோம். உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் ஒன்றாக விளையாடி வருகின்றோம். எனவே, எமக்கிடையில் காணப்படுகின்ற ஒற்றுமை தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது

அதிலும் குறிப்பாக, அணியில் விளையாடிய சக வீரர்கள் வழங்கிய 100 சதவீத பங்களிப்பினால் தான் அணித் தலைவராக என்னால் நல்ல முடிவுகளை எடுக்க முடிந்தது” என்றார்.

அதேபோல, பெரும்பாலான வீர்ர்கள் சர்வதேச போட்டி என்ற பயத்துடன் விளையாடாமல் தன்னம்பிக்கையுடன் மைதானத்துக்குச் சென்று தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததாக தசுன் குறிப்பிட்டார்

”எனவே, தலைவராக இந்த இளம் வீரர்களிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையினால் தான் அணியை சிறப்பாக வழிநடத்தவும் முடிந்தது. இந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இதனால் நானும் எந்தவொரு அழுத்தங்களுக்கும் ஆளாகாமல் எனது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்

எனவே இந்த தொடர் வெற்றிக்காக உதவிய சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இலங்கை T20 அணியின் தலைவர் லசித் மாலிங்கவும் அணிக்குள் இளம் வீரர்களைக் கொண்டு வருவதற்கு மிகப் பெரிய காரணமாக இருந்தார். அவரையும் இந்த நேரத்தில் நன்றியுடன் ஞாபகப்படுத்துகிறேன்” என தெரிவித்தார்

இந்த நிலையில், ஒரு தலைவராக இந்த சுற்றுப்யணம் குறித்து தசுன் ஷானக்க கருத்து வெளியிடுகையில்

”உண்மையில் எம்மிடம் காணப்பட்ட தன்னம்பிக்கை தான் இந்த தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. நாங்கள் இங்கு வந்து விண்வெளிக்கு ரொக்கெட் அனுப்பவில்லை. ஒற்றுமையும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்காலம் என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டினோம். வெற்றியும் பெற்றோம். எனவே இந்த வீரர்களுடன் எமக்கு நீண்ட தூரம் பயணிக்க முடியும்”

இதேநேரம், பாகிஸ்தான் இன்னிங்ஸை கட்டுப்படுத்த மேற்கொண்ட திட்டம் என்ன என எழுப்பிய கேள்விக்கு பதலளித்த அவர், உண்மையில் நாங்கள் மைதானத்தில் எதையும் பேசவில்லை. வீரர்களுடனான கூட்டத்தின் போதே என்ன செய்ய வேண்டும் என ஏற்கனவே நாங்கள் பேசிவிட்டோம். இதற்கான அனைத்து கௌரவமும் பயிற்சியாளர்களை சென்றடைய வேண்டும். அவர்கள் தான் எமக்கு நல்ல திட்டங்களைக் கொடுத்தனர். இதை நாங்கள் மைதானத்தில் செயற்படுத்தினோம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு கிடைக்கும் பாராட்டு மழை

லாஹூரில் திங்கட்கிழமை (7) இடம்பெற்று முடிந்த…

அதேபோல, 1996 உலகக் கிண்ணத்தை நாங்கள் இதே மைதானத்தில் தான் கைப்பற்றினோம். எனவே அந்த ஆடுகளத்தில் விளையாடி T20i தொடரை கைப்பற்றியது என்பது எமது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விடயமாக அமைந்தது. ஆனால் உலகக் கிண்ண வெற்றியையும், இந்த வெற்றியையும் ஒரு போதும் ஒப்பிட முடியாது

ஆனாலும், இந்த வெற்றி எமக்கு கிடைத்த மிகச் சிறந்த ஆரம்பமாகும். உலகக் கிண்ணத்தை வென்ற மைதானத்திலேயே T20 தொடரை வென்று தலை தூக்கிவிட்டோம்

எனவே, இந்த வெற்றி எம்மைப் போல கிரிக்கெட் ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் மிகப் பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதுடன், இலங்கை மக்கள் மீண்டும் கிரிக்கெட்டை நேசிக்க ஆரம்பிப்பார்கள் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<