ஆப்கானிஸ்தான் தொடருக்கான பங்களாதேஷ் ஒருநாள் குழாம் அறிவிப்பு

Bangladesh tour of Afghanistan 2025

57
Bangladesh tour of Afghanistan 2025

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அபு தாபியில் நடைபெறவுள்ள இந்த தொடருக்காக சயீப் ஹஸன் முதன்முறையாக ஒருநாள் குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நூருல் ஹாஸன் அணிக்கு திரும்பியுள்ளார்.

>>ஹொங்கொங் சிக்ஸ் தொடரில் ஆடவிருக்கும் தினேஷ் கார்த்திக்<<

சயீப் ஹஸன் நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய பின்னர், ஆசியக்கிண்ண சுப்பர் 4 சுற்றில் விளையாடியிருந்தார். இதில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அரைச்சதங்களை பதிவுசெய்து சிறந்து பிரகாசித்திருந்தார்.

ஆசியக்கிண்ணத்தில் ஏற்பட்ட உபாதையிலிருந்து குணமடைந்து வருவதன் காரணமாக லிடன் டாஸ் ஒருநாள் தொடருக்கான குழாத்தில் இடம்பெறவில்லை. அதேநேரம் தொடர் பிரகாசிப்பின்மையால் ஏமாற்றிவரும் பர்வெஸ் ஹொஸைன் எமோன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 8, 11 மற்றும் 14ஆம் திகதிகளில் அபு தாபியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

மெஹிதி ஹாஸன் மிராஷ், டன்ஷிட் ஹஸன், மொஹமட் நயீம், சயீப் ஹஸன், நஜ்முல் ஹொஸைன் செண்டோ, டவ்ஹிட் ரிடோய், ஜக்கர் அலி, ஷமிம் ஹொஸைன், நூருல் ஹாஸன், ரிஷாட் ஹொஸைன், டன்வீர் இஸ்லாம், டஸ்கின் அஹ்மட், முஷ்தபிசூர் ரஹ்மான், டன்சிம் ஹஸன், ஹஸன் மஹ்முட், நெயிட் ராணா

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<