ஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ இறுதிப் போட்டிக்குத் தகுதி

49

இலங்கை அணியின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க, ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இன்று (23) தகுதிபெற்றார்.

ஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ அபேசிங்க புதிய தேசிய சாதனை

இந்தோனேஷியாவில் நடைபெற்றுவருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று காலை

ஜகார்த்தாவிலுள்ள க்ளோனா பன்க் கரோனா நீச்சல் தடாகத்தில் ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்ற நீச்சல் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டிகளின் தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் இன்று (23) காலை நடைபெற்றன. இதில் இலங்கை அணி சார்பாக மெத்யூ அபேசிங்க, கைல் அபேசிங்க ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

போட்டியின் ஐந்தாவது தகுதிச் சுற்றின் ஐந்தாவது ஓடுபாதையில் மெத்யூ அபேசிங்க போட்டியிட்டிருந்தார். இதில் ஜப்பான், கொரியா வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த மெத்யூ அபேசிங்க, 49.48 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், 100 மீற்றர் சாதாரண நீச்சல் நான்காவது தகுதிகாண் சுற்றில் இலங்கை சார்பாக போட்டியிட்ட கைல் அபேசிங்க, 50.14 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இது கைல் அபேசிங்கவின் அதிசிறந்த நேரப் பெறுதியாகவும் பதிவாகியது.

இதன்படி, 48 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் மெத்யூ அபேசிங்க 4ஆவது இடத்தைப் பெற்று இன்று மாலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியதுடன், 13ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கைல் அபேசிங்க, அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தார்.

4x100m Freestyle Relay – Coach Hulme

Uploaded by ThePapare.com on 2018-08-22.

எனவே, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுக்கின்ற அரிய வாய்ப்பொன்று மெத்யூ அபேசிங்கவுக்கு கிடைத்துள்ளது. எனினும், இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள ஜப்பான், சீனா, ஜோர்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் தனிப்பட்ட நேரப்பெறுதி மெத்யூவின் நேரப்பெறுதியை விட குறைவாக இருந்தாலும், தகுதிகாண் போட்டிகளுடன் ஒப்பிடும் போது இறுதிப் போட்டியில் மெத்யூவிற்குப் பலத்த போட்டியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம், இன்று காலை நடைபெற்ற 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் தகுதிகாண் சுற்றில் இலங்கை வீரர்களான அகலங்க பீரிஸ் மற்றும் சிரந்த டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் மூன்றாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட அகலங்க பீரிஸ், 25.20 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். குறித்த போட்டிப் பிரிவில் அகலங்க பீரிஸின் அதிசிறந்த காலப்பெறுதியாகவும் இது பதிவாகியது.

ஒரு வெற்றியுடன் ஆசிய விளையாட்டு விழாவை முடிக்கும் இலங்கை ஆடவர் கபடி அணி

தற்பொழுது இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இடம்பெற்று வரும் 18ஆவது ஆசிய விளையாட்டு

அதேபோட்டிப் பிரிவின் நான்காவது தகுதிச் சுற்றுல் கலந்துகொண்ட சிரன்ந்த டி சில்வா, போட்டியை 25.36 செக்கன்களில் நிறைவுசெய்து 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, 40 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 24ஆவது மற்றும் 25ஆவது இடங்களைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தனர்.

இதேவேளை, இலங்கை அணியின் இளம் நீச்சல் வீரரான அகலங்க பீரிஸ் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார். குறித்த போட்டியை 2 நிமிடங்களும் 12.14 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 6ஆவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டார்.