முதல்தர ஒருநாள் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு

132

இலங்கையில் நடைபெறுகின்ற 2021/22 பருவகாலகத்துக்கான உள்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் (Major Club 50 over Tournament) எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

சுகாதார அமைச்சின் கொரோனா விதிமுறைகளுக்கு அமைய இம்முறை போட்டித் தொடர் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உள்ளூர் கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரை கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எனினும், நாட்டில் வேகமாகப் பரவிய கொரோனா வைரஸின் 3ஆவது அலை காரணமாக குறித்த தொடரை பிற்போடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள உள்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் 26 கழகங்கள் பங்குபற்றவுள்ளன.

சுமார் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் இந்தத் தொடரானது A மற்றும் B என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளதுடன், இதன் அரையிறுதிப் போட்டி நவம்பர் 26ஆம் திகதியும், இறுதிப் போட்டி நவம்பர் 28ஆம் திகதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக நடைபெற்ற 2020/21 பருவகாலத்துக்கான முதல்தர கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தி NCC கழகம் சம்பியனாகத் தெரிவாகியது.

பிரிவு அணிகள்

NCC, இராணுவ விளையாட்டுக் கழகம், முவர்ஸ் விளையாட்டுக் கழகம், கடற்படை விளையாட்டுக் கழகம், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், CCC, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், நுகோகொட விளையாட்டுக் கழகம், BRC, கண்டி சுங்க விளையாட்டுக் கழகம், களுத்துறை நகர கிரிக்கெட் கழகம், லங்கன் கிரிக்கெட் கழகம் மற்றும் விமானப்படை விளையாட்டுக் கழகம்

பி பிரிவு அணிகள்

ராகம கிரிக்கெட் கழகம், பதுரெலிய கிரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், SSC, புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், சரசென்ஸ் விளையாட்டுக் கழகம், சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், காலி கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், பொலிஸ் விளையாட்டுக் கழகம், மொறட்டுவ செபஸ்டியன்ஸ் கழகம், ACE கெபிடல் கிரிக்கெட் கழகம்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…