2024 ஆம் ஆண்டு SAFF மகளிர் சம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க போட்டியில் இலங்கை மாலைத்தீவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. இப்போட்டி காத்மண்டுவில் உள்ள டாஷ்ரத் மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை மகளிர் அணி தொடக்கத்தில் இருந்து மிகச்சிறந்த கட்டுப்பாட்டை வெளிப்படுத்தினர். அதிவேகமான முன்கள வீராங்கனைகள் எப்போதும் விழிப்புடன் இருந்து, தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த தயார் நிலையில் இருந்தனர்.
இலங்கையணி முழுமையான ஆதிக்கத்துடன், 15ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைஅடித்தது. இலங்கையின் நட்சத்திர வீராங்கனை பிரவீனா பெரேராவின் சிறந்த பந்தளிப்பு மூலம் அறிமுக வீராங்கனை இமேஷா அனுராதினி கோல் புகுத்தினார்.
- புதிய BPL பருவத்தில் விளையாடவிருக்கும் அஞ்செலொ மெதிவ்ஸ்
- நட்புரீதியான போட்டிக்கு தயாராகும் இலங்கை கால்பந்து அணி
இதனால் முன்னிலையை பெற்ற இலங்கை மகளிர் வீராங்கனைகள் ஆட்டத்தில் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டி, தொடர்ந்து பந்தைப் எடுத்துக்கொண்டு எதிரணியின் பக்கத்தில் தொடர்ந்து கோலடிக்கும் முயற்சிகளை ஏற்படுத்தினர்.
பல கோல் முயற்சிகளை மேற்கொண்டாலும், மாலைத்தீவின் கோல்கீப்பர் அமீனத் லீசாவை கடந்து கோலடிப்பதில் இலங்கை அணிக்கு சிரமம் இருந்தது. அவர் கோல்காப்பு இடத்தில் உறுதியாக இருந்து, எதிர்கொண்ட அனைத்து கோல் வாய்ப்புக்களையும் தொடர்ந்து நிறுத்தினார்.
ஆட்டநிறைவில் இலங்கை 1 இற்கு 0 என வெற்றி பெற்றது.
இலங்கை அடுத்ததாக SAFF மகளிர் சம்பியன்ஷிப்பில் 21ஆம் திகதி இதே மைதானத்தில் நேபாள அணியை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<