ஆறு மாத தடைக்கு பின்னர் தவறினை உணர்ந்த பங்களாதேஷ் வீரர்

334

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஆறு மாத போட்டித் தடைக்கு முகங்கொடுத்திந்த அவ்வணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான், இம்மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி, தேசிய அணிக்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

ராங்பூர் அணிக்கு த்ரில் வெற்றிகளை பெற்றுத்தந்த திசரவுக்கு வாய்ப்பில்லை

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) ……

சபீர் ரஹ்மான், பங்களாதேஷில் நடைபெற்ற உள்ளூர் போட்டித் தொடரொன்றின் போது, இரசிகர் ஒருவரை தாக்கியமை மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றுக்கு தவறான முறையில் பதில் அளித்திருந்தமை போன்ற விடயங்களுக்காக, கடந்த செப்டம்பர் மாதம் 6 மாத போட்டித் தடைக்கு முகங்கொடுத்தார்.

இவரது தடைக்கு பின்னர், பல வீரர்கள் தேசிய அணிக்கு அழைக்கப்பட்ட போதிலும், சபீர் ரஹ்மானின் வெற்றிடத்தை முழுயைமாக எந்த வீரர்களாலும் நிரப்ப முடியவில்லை. இந்நிலையில் தேசிய அணி எதிர்பார்ப்பு குறித்து சபீர் ரஹ்மான் குறிப்பிடுகையில்,

தேசிய அணியில் இணைவதற்கு அனைத்து வீரர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரானது, தேசிய அணியில் இடம்பெறுவதற்கு முக்கிய வாய்ப்பாக அமையும். இந்த தொடரில், எனது வழமையான துடுப்பாட்ட யுக்திளுடன் பிரகாசிக்க வேண்டும். நான் உலகக் கிண்ணம் தொடர்பில் தற்போது சிந்திக்கவில்லை. அதற்கு காலம் இருக்கிறது. அடுத்து வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பிரகாசிப்பதே எனது முதல் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது

இதேவேளை கடந்த வருடம் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, அவரது கிரிக்கெட் எதிர்காலம் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இது போன்ற தவறுகளை எதிர்காலத்தில் முழுமையாக தவிர்த்துக்கொள்ளவுள்ளதாகவும் சபீர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்தின் தடையை நீக்கிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், பங்களாதேஷ் ……

நான் செய்த தவறுகள் காரணமாக எனது கிரிக்கெட் எதிர்காலம் இன்னலுக்குள் தள்ளப்பட்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளேன். 2018ம் ஆண்டு எனக்கு மோசமான வருடமாக அமைந்து விட்டது. புதிய வருடம் ஆரம்பித்துள்ளது. இந்த வருடத்தில் எனது கிரிக்கெட் எதிர்காலத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்படவுள்ளதாக உறுதியெடுத்துள்ளேன். அதனால் எதிர்காலத்தில் எவ்வித தவறுகளையும் செய்யாமல் கிரிக்கெட் தொடர்பில் சிந்திக்கவுள்ளேன்என்றார்.

சபீர் ரஹ்மான் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் உப தலைவர் டேவிட் வோர்னர் தலைமையிலான சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். பங்களாதேஷ் பிரீமியர் லீக் எதிர்வரும் 5ம் திகதி முதல் பெப்ரவரி 8ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<