T20 உலகக் கிண்ணத்திற்கான தென்னாபிரிக்க குழாம் வெளியீடு

30
SA squad for 2026 T20 World Cup

அடுத்த மாதம் ஆரம்பமாகும் T20 உலகக் கிண்ண தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய தென்னாபிரிக்க குழாம் அந்த நாட்டு கிரிக்கெட் சபை (CSA) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட அணியில் அதிரடி வீரர் திரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக பல்வேறு T20 லீக் தொடர்களில் தனது அபார துடுப்பாட்ட திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவரும் ஸ்டப்ஸை, அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் தெரிவுக் குழுவினர் நீக்கியதாக கூறப்படுகின்றது.

விடயங்கள் இவ்வாறு காணப்பட மத்திய வரிசையில் ஆடும் அதிரடி வீரரான ஜேசன் ஸ்மித், கன்னி உலகக் கிண்ண வாய்ப்பினைப் பெற்றுள்ளார். தென்னாபிரிக்க அணிக்காக இதுவரை இரண்டு T20i போட்டிகளில் மட்டும் ஆடியுள்ள ஸ்மித், உள்ளூர் T20 லீக் தொடர்களில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்திற்காக தென்னாபிரிக்காவின் உலகக் கிண்ண அணியில் உள்வாங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கின்றது.

அதேவேளை சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அணியின் சமநிலையைக் கருத்தில் கொண்டும், ஆடுகளங்களின் தன்மையை உணர்ந்தும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய தொடரை தவறவிட்ட அனுபவ வேகப்பந்துவீச்சாளரான ககிஸோ றபாடா T20 உலகக் கிண்ண அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணி உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் உடன் ஒரு தொடரில் ஆடவுள்ளதோடு, உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் கனடாவினை பெப்ரவரி 9ஆம் திகதி எதிர்கொள்கின்றது.

தென்னாபிரிக்க குழாம் – எய்டன் மார்க்ரம் (தலைவர்), குயிண்டன் டி கொக், டோனி டி சொர்ஸி, டிவால்ட் ப்ரெவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் பெரேய்ரா, மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், ககிஸோ றபாடா, க்வெனா மபாகா, லுங்கி ன்கிடி, ஜேசன் ஸ்மித், ஜோர்ஜ் லிண்டே, கோர்பின் போஷ்ச், என்ரிச் நோர்க்கியே

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<