இங்கிலாந்து தொடருக்கான இலங்கை வளர்ந்துவரும் குழாம் அறிவிப்பு

Sri Lanka tour of Bangladesh 2022

117
18-member Sri Lanka Emerging Team
 

இங்கிலாந்து வளர்ந்துவரும் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான 18 பேர்கொண்ட இலங்கை வளர்ந்துவரும் குழாத்தின் விபரம் தொடர்பில் எமது இணையத்தளத்துக்கு அறியக்கிடைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை வளர்ந்துவரும் அணி 3 நான்கு நாட்கள் கொண்ட போட்டி மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டித்தொடர் அடுத்த மாதம் 6ம் திகதிமுதல் 29ம் திகதிவரை நடைபெறவுள்ளன.

>> ரொஷேன் சில்வாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நிறைவுக்கு வருகிறதா?

இலங்கை வளர்ந்துவரும் அணியின் தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்படவிருந்த போதும், தேசிய அணிக்கான அழைப்பின் காரணமாக, நிபுன் தனன்ஜய 4 நாட்கள் கொண்ட போட்டித்தொடருக்கான தலைவராகவும், தனன்ஜய லக்ஷான் T20I போட்டிகளுக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அணியில் விளையாடிய தனன்ஜய லக்ஷான் மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை கிரிக்கெட் வீரர்களான சென்.ஜோசப்ஸ் கல்லூரியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே மற்றும் புனித தோமையர் கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் யசிரு ரொட்ரிகோ ஆகியோர் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

அணியில் இடம்பிடித்துள்ள அதிகமான வீரர்கள் நாட்டில் நடைபெற்ற தேசிய சுபர் லீக் மற்றும் மேஜர் கழக வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான தொடர்களின் வெளிப்படுத்திய பிரகாசிப்புகளின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை அவிஷ்க பெரேரா, லசித் குரூஸ்புள்ளே, நிஷான் மதுஷ்க, நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் அவிஷ்க தரிந்து ஆகியோர் இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடுவதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்களுடன் நிபுன் தனன்ஜய மற்றும் அஷைன் பண்டார ஆகியோரும் துடுப்பாட்டத்தை பலப்படுத்தவுள்ளனர்.

சகலதுறை வீரர்களான துனித் வெல்லாலகே, சந்துஷ் குணதிலக்க, தனன்ஜய லக்ஷான் மற்றும் மானெல்கர் டி சில்வா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், சுழல் பந்துவீச்சினை டிலும் சுதீர மற்றும் அஷைன் டேனியல் பலப்படுத்தவுள்ளனர்.

வேகப்பந்துவீச்சை பொருத்தவரை நிபுன் மாலிங்க, நிபுன் ரன்சிக, உதித் மதுஷான், யசிரு ரொட்ரிகோ மற்றும் அம்ஷி டி சில்வா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாமானது புதிதாக பதவியேற்றுள்ள ருவான் கல்பகேவின் பயிற்றுவின் கீழ் விளையாடவுள்ளது. அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக மலிந்த வர்ணபுர செயற்படவுள்ளதுடன், வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சமில கமகேவும், அணியின் முகாமையாளராக வினோதன் ஜோன் ஆகியோரும் செயற்படவுள்ளனர்.

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை வளர்ந்துவரும் குழாம்

நிபுன் தனன்ஜய (நான்கு நாள் போட்டித்தொடருக்கான தலைவர்), தனன்ஜய லக்ஷான் (T20 தலைவர்), லசித் குரூஸ்புள்ளே, அவிஷ்க பெரேரா, சந்துஷ் குணதிலக்க, அவிஷ்க தரிந்து, நுவனிந்து பெர்னாண்டோ, நிஷான் மதுஷ்க, அஷேன் பண்டார, துனித் வெல்லாலகே, டிலும் சுதீர, அஷைன் டேனியல், நிபுன் மாலிங்க, நிபுன் ரன்சிக, மானெல்கர் டி சில்வா, யசிரு ரொட்ரிகோ, உதித் மதுஷான், அம்ஷி டி சில்வா

போட்டி அட்டவணை

போட்டி அட்டவணை

திகதி போட்டி மைதானம்
மே 6 முதல் 9 முதல் 4 நாள் போட்டி கெண்டபெரி– கெண்ட்
மே 13 முதல் 16 2வது நான்கு நாள் போட்டி ஏஜஸ் போவ்ல் – ஹெம்ஷையர்
மே 20 முதல் 23 3வது நான்கு நாள் போட்டி கில்பர்ட் சிசி – சர்ரே
மே 25 முதல் T20 கியா ஓவல் – சர்ரே
மே 27 2வது T20 தி கூபர் ஏசிஜி – சமரெஸ்ட்
மே 29 3வது T20 பிரிஸ்டோல் கௌண்டி மைதானம் – குளோசெஸ்டர்ஷைர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<