கொவிட்-19 வைரஸினால் ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி

191

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

இயற்கையை முன்நிறுத்தி புதிய ஜேர்ஸியில் களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ்

தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்த நாட்டு வீரர்களுடன் தலா மூன்று போட்டிகள் வீதம் கொண்ட ஒருநாள், T20 தொடர்களில் ஆடுகின்றது. அதன்படி, இந்த சுற்றுப் பயணத்தில் T20 தொடர் நிறைவுக்கு வந்திருக்கும் சந்தர்ப்பத்தில் இன்று (4) மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கேப் டவுன் நகரில் ஆரம்பமாக இருந்தது.

எனினும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதனாலேயே இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம், ஒத்திவைக்கப்பட்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) மீண்டும் இடம்பெறும் எனவும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தமது ஊடக அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை இரு அணிகள் இடையில் நடைபெற்று முடிந்த T20 தொடரினை இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3-0 எனக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<