வடக்கு மக்களுக்காக உதவிக் கரம் நீட்டும் சங்கா, மஹேல

94
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் அடங்கிய குழுவொன்று 6000 உலர் உணவு பொதிகளை வழங்கும் செயற்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் எந்த அணி சாதிக்கும்?

சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் விளையாட்டில் போட்டித்…..

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அரசின் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல பிரதேசங்களிலும் உள்ள மக்கள் தங்களுடைய உணவு தேவையினை பூர்த்திசெய்வதற்கு தடுமாறி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் உள்ளடங்கிய மெக்னம் என பெயரிடப்பட்டுள்ள கழகம் ஒன்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அடையாளம் கண்டு உலர் உணவு பொதிகளை வழங்கி வருகின்றனர்.

குறித்த உணவு பொதிகள் நாட்டின் வடக்கு, கேகாலை மற்றும் ருக்மல்கம ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொதிகள் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பிரதேச சபை மற்றும் கிராம சேவகர் பிரிவு போன்றவற்றின் உதவியுடன் வழங்கப்படுகின்றது. 

இதன் முதற்கட்டமாக 5,000 பொதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் 2,000 பொதிகள் வழங்கப்படவுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய எம்.சி.சி. தலைவருமான குமார் சங்கக்கார கடந்த 14 நாட்களாக சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்திருந்தார்.

நாளாந்தம் உழைப்பவர்களுக்கு உதவ முன்வந்திருக்கும் மஹாநாம, வாஸ் ஜோடி

கொரோனா வைரஸினால் இலங்கையில் ஊரடங்குச் சட்டம்….

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்காக இலங்கை கிரிக்கெட் சபை 25 மில்லியன் ரூபாவினை வழங்கியிருந்த நிலையில், திமுத் கருணாரத்ன உள்ளிட்ட இலங்கை அணியின் வீரர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளுக்கு கொரோனா தொற்றுக்கு தேவையான வைத்திய உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான நிதியினை வழங்கியிருந்தனர்.

அதேநரம் இன்றைய தினம் (30) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் COVID 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் ஒரு தொகைப் பணத்தை நன்கொடையாக ஜனாதிபதி செயலாளர் பி .பி ஜெயசுந்தரவிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<