ஹாலண்டை திட்டமிட்டு கேலி செய்த நெய்மார்

169

கடந்த மாதம் நடைபெற்ற ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பொருசியா டொர்ட்முண்ட் அmணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியின் நெய்மார் எதிரணியின் எர்லிங் ஹாலண்டுக்கு எதிராக திட்டமிட்டு பதிலடி கொடுத்தது பற்றிய விபரம் தற்போது வெளியாகியுள்ளது.   

இந்த 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் ஜெர்மனியின் டொர்ட்முண்ட் கழகம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதும் PSG இரண்டாவது கட்ட போட்டியில் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று 3-2 என்ற மொத்த கோல் கணக்கில் காலியிறுதிக்கு முன்னேறியது

லியோனல் மெஸ்ஸியை பிடிக்காத 5 வீரர்கள்

லியோனல் மெஸ்ஸி கால்பந்து உலகில் தோன்றிய …..

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, பிற்போடப்பட்ட ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டிகள் இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெற வாய்ப்பு உள்ளது.  

இதில், 16 அணிகள் சுற்றில் PSG அணிக்கு எதிரான முதல் கட்டப் போட்டியில் டொர்ட்முண்ட் சார்பில் எர்லிங் ஹாலண்ட் இரண்டு கோல்களையும் பெற்று அந்த அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருந்தார். அவர் இந்த இரண்டு கோல்களை பெற்றபோதும் தியானம் செய்வது போன்று அமர்ந்து காட்சி கொடுத்தார்

இந்தப் போட்டிக்குப் பின்னர் ஹாலண்ட்ஸ்னப்சாட்சமூகதளத்தில் பதிவிட்ட வாசகம் பிரபலம் அடைந்தது. அவர் அதில் பாரிஸ் நகரைக் குறித்து, “உங்களுடையதல்ல, அது என்னுடைய நகர்என்று குறிப்பிட்டிருந்தார். நெய்மார் மற்றும் PSG அணியின் சிலரை வெறுப்பூட்டுவது போன்ற இந்தப் பதிவு போலியானது என சிலர் கூறியமை குறிப்பிடத்தக்கது

எனினும் தியானம் மீதான தமது ஆர்வம் காரணமாகவே தாம் அவ்வாறு காட்சி கொடுத்ததாக நோர்வே முன்கள வீரரான ஹாலண்ட் பின்னர் விளக்கமளித்திருந்தார்.  

ஆனால், 16 அணிகள் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டியில் நெய்மார் 28 ஆவது நிமிடத்தில் முதல் கோலை புகுத்தி PSG அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அப்போது நெய்மாரும், ஹாலண்ட் போன்று தியானம் செய்வது போல் காட்சி கொடுத்து தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து ஜுவான் பெர்னாட்டின் கோல் மூலம் PSG காலிறுதிக்குத் தகுதிபெற்றது.

இந்தப் போட்டியின் கடைசி நேரத்தில் இரு அணிகளுக்கும் இடையே மோதல் வெடித்ததோடு டொர்ட்முண்ட் வீரர் எம்ரே கேன் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். இந்நிலையில் போட்டிக்குப் பின்னர் ஹாலண்டை கேலி செய்வது போல் PSG அணியின் அனைத்து வீரர்களும் மைதானத்தில் தியானத்தில் அமர்ந்து காட்சி கொடுத்தனர்.  

இதனை அடுத்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நெய்மார் அதில், “பாரிஸ் எங்களுடைய நகர், உங்களுடையதல்லஎன்று குறிப்பிட்டிருந்தார்.

PSG வீரர்களின் இந்த நடத்தை குறித்து ஐரோப்பிய கால்பந்து சம்மேளனங்களின் கூட்டமைப்பு (UEFA) உத்தியோகபூர்வமான எச்சரிக்கையை விடுத்தபோதும் இது PSG வீரர்கள் தியானம் இருந்த கொண்டாட்டத்திற்கா அல்லது சிவப்பு அட்டை பெற்ற சம்பவம் தொடர்பிலா என்பது பற்றி தெளிவில்லாமல் உள்ளது.   

எனினும் இந்தப் போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்திலேயே நடைபெற்றது. இதனால் ரசிகர்கள் இடையே இந்த சம்பவங்கள் பெரிதாக தாக்கம் செலுத்தவில்லை

இந்நிலையில் நெய்மாரின் இந்த நடத்தை குறித்து பிரேசில் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சக வீரரான மார்கின்ஹோஸ் Desimpedidos என்ற யூடியும் சென்னலுக்கு விளக்கமளித்துள்ளார்.

மீண்டும் அம்பலமாகும் பிஃபா உலகக் கிண்ண ஊழல் விவகாரம்

2018 மற்றும் 2022 ….

போட்டிக்கு முன்னரே ஹாலண்டுக்கு பதிலடி கொடுப்பதற்கு நெய்மார் திட்டமிட்டிருந்ததாக மார்கின்ஹோஸ் தெரிவித்தார்.

அதனை (மோதலை) அவர் விரும்பினார்என்று நெய்மாரின் நடத்தை குறித்து தெரிவித்த மார்கின்ஹோஸ் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டாம் என்று அவர் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

நெய்மார் வெறுமனே ஒரு கால்பந்து வீரர் மாத்திரமல்ல, அவர் எப்போதும் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு பதில் கொடுக்க பயப்படுவதில்லை

அவரது கோலுக்குப் பின்னர் அனைத்தையும் வெளிப்படுத்தி விட்டீர்களா என்று கேட்டேன். போட்டி முடியும்வரை காத்திருக்கும்படி நான் கேட்டுக்கொண்டபோது கொண்டாட்டத்தை கைவிட வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்தார் என்று நடந்த சம்பவம் பற்றி விபரித்தார் மார்கின்ஹோஸ்.  

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் பட்டத்தை முதல் முறை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் தற்போது காலியிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அதனுடன் அட்லாண்டா, அட்லடிகோ மெட்ரிட் மற்றும் RB லிப்சிக் அணிகளும் காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளன. எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக காலவரையின்றி போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க