நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு

75
GETTY IMAGES

நியூசிலாந்து சென்றிருக்கும், இந்திய கிரிக்கெட் அணி அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடிய பின்னர் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு

தற்போது நியூசிலாந்து சென்றுள்ள…………..

இந்த ஒருநாள் தொடர் எதிர்வரும் புதன்கிழமை (5) ஹெமில்டன் நகரில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்திய – நியூசிலாந்து அணிகள் இடையில் நடைபெற்ற T20 தொடரின் கடைசிப் போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா, தனது கால் தசையில்  உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருந்தார். இந்த உபாதையினால், ரோஹித் சர்மா குறித்த போட்டியில் 60 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மைதானத்தினை விட்டும் வெளியேறினார். ரோஹித் சர்மாவின் இந்த உபாதை இன்னும் குணமாகாத நிலையிலேயே அவர்  நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளியேறியிருக்கின்றார். 

ரோஹித் சர்மா இல்லாத நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் குழாத்தில் ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ள ப்ரீத்வி சாஹ்வினை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்க எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம், நியூசிலாந்தில் இந்திய A அணிக்காக விளையாடி வரும் சுப்மான் கில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. 

வெறும் 20 வயது மாத்திரமே நிரம்பிய சுப்மான் கில் நியூசிலாந்து A அணிக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டியில் இரட்டைச்சதம்  (204*) விளாசி திறமையினை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

T20I தரவரிசையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்ட ராஹுல்

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய T20I வீரர்கள்…………….

எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI), ரோஹித் சர்மாவின் பிரதியீட்டு வீரர் தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை. 

ரோஹித் சர்மா, நியூசிலாந்தில் இந்திய அணி விளையாடவுள்ள ஒருநாள் தொடர் மட்டுமல்லாது, அதனை அடுத்து நியூசிலாந்தில் பெப்ரவரி மாதம் 21 ஆம் ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்பட்டிருக்கின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<