ஜனவரி மாத சிறந்த வீரர்: ஐ.சி.சி பரிந்துரைப் பட்டியலில் மூன்று வீரர்கள்

225

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிமுகம் செய்துள்ள மாதத்தின் சிறந்த வீரர் விருதில் ஜனவரி மாதத்திற்கு இந்தியாவின் ரிஷப் பண்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் அயர்லாந்தின் போல் ஸ்டெர்லிங் உள்ளிட்ட மூவரது பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.

சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் .சி.சி வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும் என்று கடந்த வாரம் .சி.சி அறிவித்தது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கட்கிழமை இந்த விருது இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினர் இந்த விருதை இறுதி செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐ.சி.சி அறிமுகம்

மேலும் 10 சதவீத ரசிகர்களின் வாக்கெடுப்பும் இதில் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதத்திற்கான சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைகளை தற்போது .சி.சி வெளியிட்டுள்ளது

எனவே, மாதத்தின் சிறந்த வீரர் விருது முதல் முறையாக வழங்கப்படவுள்ள நிலையில், அந்த விருதுக்காக இந்திய வீரர்களான ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் சிராஜ், நடராஜன், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ், அயர்லாந்தின் போல் ஸ்டெர்லிங் உட்பட சில வீரர்களின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன

இதில் கடந்த மாதம் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்த ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் மற்றும் அயர்லாந்து வீரர் போல் ஸ்டெர்லிங் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி

இதில் ரிஷப் பண்ட் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்சில் 97 ஓட்டங்களையும், பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியின் 2ஆவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களையும் விளாசினர். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை ருசித்தது. இதனால் ரிஷப் பண்ட் பெயரை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.

மறுபுறத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 228 ஓட்டங்களையும், 2ஆவது டெஸ்ட் போட்டியில் 186 ஓட்டங்களையும் விளாசினார்.

அவுஸ்திரேலிய T20 அணியில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி வீரர்

இதனால் இங்கிலாந்து அணி 2 க்கு 0 என இலங்கையை வீழ்த்தியது. எனவே, இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததால் ஜோ ரூட் பெயரையும் பரிந்துரை செய்துள்ளது.

அயர்லாந்து அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான போல் ஸ்டெர்லிங் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டியில் 3 சதங்களை விளாசினார். இதனால் அவரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல வீராங்கனைகள் வரிசையில் பாகிஸ்தான் வீராங்கனை டயானா பெய்க், தென்னாபிரிக்க வீராங்கனைகளான ஷப்னிம் இஸ்மாயில், மாரிசான் காப் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<