ரியோ ஒலிம்பிக் : அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் 200மீ பந்தயத்தில் விலகல்

275
Cameron McEvoy

அவுஸ்திரேலியாவின் முன்னணி நீச்சல் வீரரான 22 வயது கேமரூன் மெக்வோய் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 50 மீட்டர், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பிரீஸ்டைல் மற்றும் 3 தொடர் நீச்சல் பந்தயங்களில் கலந்து கொள்ளத் தேர்வாகி இருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் அவர் 200 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் இருந்து மட்டும் விலகி இருக்கிறார். மற்ற 5 பந்தயங்களில் பங்கேற்கிறார்.

இது குறித்து கேமரூன் கருத்துத் தெரிவிக்கையில், “எனக்கு மிகவும் பிடித்தமானது 200 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயமாகும். நீண்டகாலமாக இந்த பந்தயத்தில் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வரும் நான் அந்தப் பந்தயத்தில் இருந்து விலக எடுத்த முடிவு மிகவும் கடினமானதுஎன்றார். அவருக்குப் பதிலாக 200 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் சக நாட்டு வீரர் டேவிட் மெக்கோன் கலந்து கொள்ளவிருக்கிறார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்