மகளிர் CPL தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து!

Women’s Caribbean Premier League 2024

46
Women’s Caribbean Premier League 2024

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள மகளிர் கரீபியன் பிரீமியர் லீக்கில் இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்து விளையாடவுள்ளார்.

சமரி அதபத்து மகளிர் கரீபியன் பிரீமியர் லீக்கின் நடப்பு சம்பியனான பார்படோஸ் ரோயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

>>தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி<<

இந்த ஆண்டு சமரி அதபத்து இலங்கை மகளிர் அணிக்காக சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றார்.12 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு சதம் அடங்கலாக 371 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ள இவர் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் அடங்கலாக மொத்தமாக 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் எதிர்வரும் 21ம் திகதி முதல் 27ம் திகதிவரை பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. டிரைன்பகோ நைட் ரைடர்ஷ், அமேஷன் வொரியர்ஸ் மற்றும் பார்படோஸ் ரோயல்ஸ் ஆகிய மூன்று அணிகள் மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<