மூன்றாவது முறை இடம்பெறவுள்ள Ride4ceylon இன் வடக்கை நோக்கிய சைக்கிள் சவாரி

286

மூன்று தசாப்தகால கோர யுத்தம் இலங்கைத் தீவினை பல்வேறு வகைகளிலும் பாதித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி இன்று மீளக்கட்டமைப்பு செய்யப்பட்டு வரும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மானிப்பாய் கீறின் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இன்னும் உதவிகளை செய்து கொடுப்பதற்கு தேவையாக உள்ள நிதியினை சேகரிக்க Ride4ceylon அறக்கட்டளை நிறுவனம் ஏற்பாடு செய்த சைக்கிள் சவாரி மூன்றாவது முறையாக 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி தொடக்கம் மார்ச் 02ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

2018இல் தேசிய, சர்வதேச மட்டத்தில் ஜொலித்த நம்மவர்கள்

2018ஆம் ஆண்டானது பல்வேறு தேசிய…

மானிப்பாய் கீறின் ஞாபகார்த்த வைத்தியசாலை, 1847ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையான வைத்தியர் சாமுவேல் பிரிஸ்க்கே கீறின் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்தாபகரினை நினைவுகூறும் விதமாகவே மானிப்பாய் வைத்தியசாலைகீறின் ஞாபகார்த்த வைத்தியசாலைஎன அழைக்கப்பட்டு வருவதுடன், இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மருத்துவ பாடசாலையாகவும் (Medical School) கீறின் ஞாபகார்த்த வைத்தியசாலை கருதப்படுகின்றது.

தொடர்ந்து, 20ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் பிரபல்யம்மிக்க  மருத்துவ பாடசாலைகளில் ஒன்றாகவும், மக்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்றும் கேந்திர நிலையமகாவும் உருவெடுத்த இந்த கீறின் ஞாபகார்த்த வைத்தியசாலை இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக ஒரு கட்டத்தில் யாராலும் கவனிக்கப்படாத ஒரு இடமாக மாறியது.

கீறின் ஞாபகார்த்த வைத்தியசாலை

எனினும், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையை சேர்ந்த நண்பர்கள் தங்களது அயராத முயற்சி மூலம்மானிப்பாய் வைத்தியசாலையின் நண்பர்கள் (Friends of Manipay Hospital)“ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் கிடைக்கப்பெற்ற உதவிகளோடு வைத்தியசாலையினை மீண்டும் இயங்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். இதனால் இன்று வடமாகாணத்தை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்த வைத்தியசாலை மூலம் பயன்பெற்று வருகின்றனர்.  

அந்தவகையில் இலங்கையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த வைத்தியசாலைக்கு கொழும்பு புனித தோமியர் கல்லூரியின் பழைய மாணவர்களும் மானிப்பாய் வைத்தியசாலையின் நண்பர்கள் அறக்கட்டளையுடன் இணைந்து  “Ride4Ceylon” என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை அமைத்து சைக்கிள் சவாரி ஒன்றின் மூலம் நிதி சேகரித்து உதவி புரிந்து வருகின்றனர்.

Ride4Ceylon அறக்கட்டளையினால் 2017ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டு வரும் இந்த சைக்கிள் சவாரி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை இடம்பெறுவதோடு, கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் வரையிலான பயணப்பாதையினையும் கொண்டதாகவும் அமைந்துள்ளது.  

Ride4Ceylon அமைப்பினால் 2017ஆம் ஆண்டில் முதற்தடவையாக இந்த சைக்கிளோட்டத் தொடர் ஆரம்பிக்கப்படும் பொழுது அதில் 5 பேர் கலந்து கொண்டிருந்ததோடு, 2018ஆம் ஆண்டில் அது 25 பேராக மாறியிருந்தது.  

கடந்த இரண்டு ஆண்டுகளிலும் இந்த சைக்கிள் சவாரி மூலம் கிட்டத்தட்ட 15 மில்லியன் ரூபாவுக்கு மேலான நிதி சேகரிக்கப்பட்டிருந்ததோடு குறித்த நிதி 2017ஆம் ஆண்டு வைத்தியசாலையின் நரம்பு தொடர்பான மருத்துவ சேவைப் பிரிவை விருத்தி செய்யவும், தாதியர் கட்டடத் தொகுதியின் புணரமைப்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது.  

காது கேட்காமலும், வாய் பேசாமலும் உலக கிரிக்கெட் சம்பியனான நம்மவர்கள்

சாதாரண ஒரு மனிதனைப் போல எமக்கு…

தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட நிதி மூலம் ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதோடு, சிறுவர்இதய நோயாளர் வைத்தியப் பிரிவும் மேம்படுத்தப்பட்டிருந்தது.   

இந்த சைக்கிள் சவாரி தொடர் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி கடந்த ஆண்டுகளில் பிரயோஜனம் தரும் விதத்தில் பயன்படுத்தப்பட்டதால் 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சைக்கிள் சவாரினால் சேகரிக்கப்படவிருக்கும் நிதி இப்போது மானிப்பாய் வைத்தியசாலைக்கு தேவையாக உள்ள சிறுவர்இதய நோயாளர் வைத்தியப்பிரிவு விருத்தி, எக்ஸ்ரே (X-Ray) இயந்திரத்தை மேம்படுத்தல் மற்றும் ஏனைய பொதுச் சேவைகள் என்பவற்றுக்காக பயன்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

புதிதாக 2019ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள சைக்கிள் சவாரியினை இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளரும், Ride4Ceylon அறக்கட்டளையின் தூதுவர்களில் ஒருவருமான ரசல் ஆர்னல்ட் அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தார்.

இந்த சைக்கிள் சவாரி பற்றி கருத்து தெரிவித்த அர்னோல்ட் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.  

யாழ்ப்பாணமும், ஒரு காலத்தில் முன்னணியில் திகழ்ந்த கீறின் ஞாபகார்த்த வைத்தியசாலையும் உள்நாட்டுப் போரினால் அழிவடைந்திருந்தன. Ride4Ceylon இன் முயற்சிகளுக்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வைத்தியசாலை ஒரு காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியான நிலை ஒன்றுக்கு படிப்படியாக  வந்து கொண்டிருக்கின்றது. இப்படியான முயற்சிகள் பெளதிக ரீதியாகவும், மன ரீதியாகவும் எமது நாட்டை கட்டியெழுப்ப இன்றியமையாததாக உள்ளது.“  

2020 டி-20 உலகக் கிண்ண நேரடித் தகுதியை இழந்த இலங்கை அணி

அவுஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு…

மூன்றாவது முறையாக இடம்பெறவுள்ள சைக்கிள் சவாரியில் 30 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு, உதவி செய்யும் மனப்பாங்கு கொண்ட அனைவரும் தங்களது பங்களிப்புக்களை வழங்கலாம் எனவும் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், இந்த சைக்கிளோட்ட தொடரின் போது விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய ஐந்து பொதிகள், வட மாகாணத்தின் 5 தரப்பினருக்கு பகிர்ந்து கொடுக்கப்படவுள்ளமை சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

நல்ல காரியம் ஒன்றுக்காக இடம்பெறவுள்ள இந்த சைக்கிளோட்ட தொடர் மிகவும் வெற்றிகரமாக நடைபெற இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com உம் Ride4Ceylon உடன் ஊடக பங்காளர்களாக இணைந்துள்ளது என்பதையும் நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நல்லென்ன நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த செயற்றிட்டத்திற்கு நிதி உதவிகளை வழங்க விரும்புகின்றவர்களுக்கு, அதற்காக வாய்ப்பினையும் சவாரி ஏற்பாட்டாளர்கள் வழங்கியிருக்கின்றனர்.

அதற்காக www.ride4ceylon.com என்ற இணையத்தளத்தினூடாக அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்பினை ஏற்படுத்த முடியும். அல்லது கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு உங்கள் நிதி உதவிகளை வழங்க முடியும்.

INSTITUTE OF MEDICAL SCIENCES TRUST
Commercial Bank of Ceylon PLC
Jaffna Branch,
Account number: 1060111500

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<