பாடசாலைகளுக்கு இடையிலான 14 வயதுக்குட்டோருக்கான அகில இலங்கை கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கு தொடர்ச்சியாக 13ஆவது ஆண்டாகவும் அனுசரணை வழங்க CBL சமபோஷ நிறுவனம் பெருமையுடன் முன்வந்துள்ளது.
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கத்தினால் (SSFA) ஏற்பாடு செய்யப்படும் ‘CBL சமபோஷ 14 வயதுக்குட்பட்டோருக்கான பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடர் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தனது வழிகாட்டல்களையும், ஒத்துழைப்பையும் வழங்குகின்றது.
இந்தப் போட்டித் தொடரில் 12,000 இற்கும் அதிகமான பாடசாலை வீரர்கள் கலந்துகொள்ள இருப்பத்துடன், பல ஆண்டு;களாக இந்த கால்பந்தாட்டத் தொடருக்கு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் உற்சாகமான வரவேற்புக் காணப்படுகின்றமை விசேடமானது. நாடு முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் 32 மைதானங்களில் 492 மாணவர்கள் அணிகளும், 118 மாணவிகள் அணிகளும் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளன. இந்தப் போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் வெற்றிபெறும் 32 ஆடவர் அணிகளும், 28 மகளிர் அணிகளும் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற உள்ளன. இந்தப் போட்டிகள் வவுனியாவை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டி தொடரின் முதலாவது சுற்று ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், இரண்டாவது சுற்று பெப்ரவரி 1, 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வவுனியாவில் ஆரம்பமாக உள்ளன. ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனைக்கான அங்கீகாரம் மற்றும் பரிசுகள் போட்டித் தொடரின் முடிவின் போது வழங்கப்படவுள்ளது.
CBL உணவுப் பிரிவின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரி மஞ்சுள தகநாயக்க இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் கால்பந்தாட்ட விளையாட்டின் மீது காண்பித்துவரும் அக்கறையை அதிகரிப்பதற்காகவும், விளையாட்டின் ஊடாக கூட்டாகச் செயற்படும் ஆற்றல், பொறுப்பு மற்றும் எதிர்கால விளையாட்டு அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கிலும் CBL சமபோஷ இந்த கால்பந்தாட்டத் தொடருக்கு அனுசரணை வழங்குகின்றது. தேசிய நிறுவனம் என்ற ரீதியில் நாளாந்தம் பிள்ளைகளின் எதிர்காலப் பயணத்திற்காக ஒத்துழைப்பு வழங்குவது எமது எதிர்பார்ப்பு என்பதுடன், இந்த அனுசரணையின் ஊடாகவும் இதனையே நாம் எதிர்பார்க்கின்றோம்’ என்றார்.
- இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியில் வடக்கு மற்றும் மலையக வீராங்கனைகள்
- உலக கால்பந்து தரவரிசையில் இலங்கை அசுர முன்னேற்றம்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ‘உலகில் மிகவும் பிரபல்யமாக விளங்கும் விளையாட்டான கால்பந்தாட்டத்தை இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகள் மற்றும் சகல குடிமக்கள் மத்தியில் மேலும் ஊக்குவிப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். CBL சமபோஷ 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக 14 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலை கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பிற்கு ஆதரவளித்து வருவது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் போட்டித் தொடர் வெறும் உதைப கால்பந்தாட்ட விளையாட்டிற்கு அப்பாற்பட்டு, நமது நாட்டின் எதிர்கால சந்ததியினரை வளர்ப்பதற்கான போட்டியாகும். CBL சமபோஷவுடன் கைகோர்த்து, எமது பாடசாலை வீரர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் மற்றுமொரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் கால்பந்தாட்டத் தொடரை நடத்துவதே எமது நோக்கமாகும்’ என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை பாடசாலை கால்பந்தாட்ட சங்கத்தில் தலைவர் யூ.எஸ்.ஏ.பண்டார லீலரத்ன குறிப்பிடுகையில், ‘நாட்டின் தொலைதூர நகரங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்கவும், போட்டியிடவும் வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டி தனித்துவமானது. 14 வயதிற்குட்பட்டவர்கள் இப்போது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்த நிலையில் இருப்பதுடன், போட்டிக்குத் தயாராகவும் காணப்படுகின்றனர். எனவே, இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க அதிக எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்திருந்தனர். இந்த முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்த உதவிய CBL சமபோஷவுக்கு எனது நன்றிகள்’ என்றார்.
கல்வி அமைச்சின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கான பணிப்பாளர் லெப்டினட் கேனல் ஜீ.ஜீ.அநுர அபேவிக்ரம அவர்கள் கால்பந்தாட்டத் தொடரின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்தப் போட்டித் தொடரானது சிலருக்கு முதல் முறையாகப் பங்கேற்கும் போட்டியாக இருக்கலாம். எனவே இந்தப் போட்டித் தொடரானது அவர்களின் எதிர்கால விளையாட்டு வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவது விளையாட்டுத் துறைக்கு முக்கியமானதாகும். எனவே, கடந்த 13 ஆண்டுகளாக சமபோஷவினால் வழங்கப்படும் தொடர் ஒத்துழைப்பைப் பாராட்டுகின்றோம்’ என்றார்.
சமபோஷ என்பது CBL குழுமத்தின் முழுமையான உறுப்பு நிறுவனமான CBL Plenty Foods (Pvt.) Ltd நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமம் ஆகும். இது நாட்டின் தானியம் நிறைந்த போஷாக்கு மிக்க காலை உணவின் முன்னணி வர்த்தக நாமமாகும். இந்நாட்டின் விவசாயிகளால் வழங்கப்படும் பலம் மிக்க பெறுமதியான தானியங்களே நாடு முழுவதிலும் உள்ள சிறார்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உயர்ந்த போஷாக்கை வழங்க தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் உள்ளது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<