இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் புதிய மாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
2025 ஐபிஎல் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
அதன்படி, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடருக்கு மேலதிகமாக ஏற்கனவே ஒரு ஒருநாள் போட்டி சேர்க்கப்பட்ட நிலையில் அது தற்போது இரண்டாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி புதிதாக சேர்க்கப்பட்ட ஒருநாள் போட்டிகள் இரண்டும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. புதிதாக ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டு ஒருநாள் போட்டிகளும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்தாலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை
டெஸ்ட் தொடர்
- முதல் போட்டி – ஜனவரி 29 தொடக்கம் பெப்ரவரி 02 – காலி
- இரண்டாவது போட்டி – பெப்ரவரி 06 தொடக்கம் 10 – காலி
ஒருநாள் தொடர்
- முதல் போட்டி – பெப்ரவரி 12 – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு
- இரண்டாவது போட்டி – பெப்ரவரி 14 – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<