இந்தியன் பிரீமியர் லீக் (LPL) வீரர்கள் ஏலத்தின் முதல் நாள் ஏலத்தில் இலங்கை அணியின் இரண்டு முன்னணி வீரர்கள் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடவுள்ளனர்.
>>பங்களாதேஷினை பந்துவீச்சில் மிரட்டிய யாழ். மண்ணின் ஆகாஷ்<<
ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய ரூபாயில் 5.25 கோடிக்கு (18.09 கோடி இலங்கை ரூபாய்) வனிந்து ஹஸரங்கவை வாங்கியுள்ளதுடன், மஹீஷ் தீக்ஷனவை 04.40 கோடிக்கு(15.16 கோடி இலங்கை ரூபாய்) வாங்கியுள்ளது.
IPL ஏலத்தின் முதல் நாளில் இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போயிருந்தார். இவர் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காக 27 கோடிக்கு (93.03 கோடி இலங்கை ரூபாய்) வாங்கப்பட்டார்.
அதேநேரம் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் தலைவராக செயற்பட்ட சிரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடிக்கு (92.17 கோடி இலங்கை ரூபாய்) வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<