IPL இறுதிப் போட்டியை நடத்துவதற்கான தகுதியை இழக்குமா சென்னை?

302
PLT20.COM

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கில் மூன்று பார்வையாளர்கள் அரங்குகள் தொடர்ந்தும் மூடப்பட்டு இருப்பதால், ஐ.பி.எல். இறுதிப் போட்டியை அங்கு நடத்த முடியாத சூழ்நிலை நிலவுவதாக இந்திய கிரிக்கெட் சபை கருத்து வெளியிட்டுள்ளது.  

ஐ.பி.எல். வரலாற்று சாதனையை முறியடித்த அல்ஷாரி ஜோசப்

ஐ.பி.எல். தொடரில் நேற்று (06) …….

எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தின் மூன்று பார்வையாளர் அரங்குகள் தொடர்ந்தும் திறக்கப்படாமல் இருக்குமானால், ஐ.பி.எல். இறுதிப் போட்டி மற்றும் முதல் தகுதிப் போட்டி (குவாலிபையர் போட்டி) என்பன ஹைதராபாத்திலும், ப்ளே-ஓஃப் போட்டிகள் பெங்களூரிலும் நடத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இந்திய கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (08) நடைபெற்ற போது, குறித்த விடயம் தொடர்பில் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியனாக இருக்கும் சென்னை அணிக்கு இறுதிப் போட்டியை நடத்துவதற்கான முழு அதிகாரமும் உள்ளது. எனினும், குறித்த மூடப்பட்டுள்ள பார்வையாளர் அரங்குகள் திறக்கப்படாவிடின், இறுதிப் போட்டியை அங்கு நடத்துவது இயலாத விடயம் என நிர்வாகக்குழு சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இறுதிப் போட்டியை சென்னை அணி நடத்துவதற்கு சில நாட்கள் அவகாசத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் மூன்று பார்வையாளர்கள் அரங்குகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு குறித்த அரங்குகள் திறக்கப்படாவிடின் இறுதிப் போட்டிக்கான மைதானம் மாற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இம்முறை ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி நடைபெற்றதுடன், அதனைத் தவிர ஏனைய இரண்டு போட்டிகளும் அங்கு நடைபெற்றுள்ளன. ஆனால், மூடப்பட்டிருக்கும் பார்வையாளர் அரங்குகள் இதுவரை திறக்கப்படவில்லை. போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது, இவ்வாறு அரங்குகள் மூடப்பட்டுள்ளமை ஐ.பி.எல். நிர்வாகத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் சிக்ஸர் மழை பொழிந்த என்ரே ரசல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற …..

இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஐ.பி.எல். தொடரின் பிரதான நிறைவேற்று அதிகாரி வினோத் ராய், “சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தின் மூன்று அரங்குகள் பூட்டப்பட்டிருக்கின்றன. அவர்களால் (சென்னை அணி) அரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் எம்மால் இறுதிப் போட்டியை அங்கு நடத்த முடியாது. எமக்கு மாற்றீடாக ஹைதராபாத் மற்றும் பெங்களூர் மைதானங்கள் உள்ளன” என்றார்.

எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தின் 12,000 இருக்கைகள் அடங்கிய மூன்று பார்வையாளர்கள் அரங்குகள் (I, J, K அரங்குகள்) சென்னை மாநகராட்சியால் மூடப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு முன்னர் மைதானம் சீரமைக்கப்பட்ட போது, ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக குறித்த அரங்குகள் மூடப்பட்டன. இதன் பின்னர், 2012ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் மாத்திரமே குறித்த அரங்குகள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் சுமார் 7 வருடங்களுக்கு குறித்த அரங்குகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<