சுற்றுலா பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது.
19 வயதின்கீழ் ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட முதல்தரப் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடுகின்றது.
இந்த நிலையில் இலங்கை – பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் காலியில் இன்று (24) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷிற்கு வழங்கினர்.
அதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் இலங்கையின் சுழல்பந்துவீச்சிற்கு தடுமாறத் தொடங்கியதோடு 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 141 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ரிதோய் ஹஸ்ஸன் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கையின் பந்துவீச்சில் யாழ். மண்ணின் சுழல்பந்துவீச்சாளரான விக்னேஷ்வரன் ஆக்காஷ் வெறும் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். மறுமுனையில் ரசித் நிம்சார 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.
ஐ.பி.எல். 2025 தொடருக்கான திகதிகள் அறிவிப்பு
பின்னர் இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாட ஆரம்பித்த போது போட்டியில் மழையின் குறுக்கீடு உருவாக ஆட்டம் கைவிடப்பட்டது. இலங்கை போட்டி நிறுத்தப்படும் போது 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
பங்களாதேஷ் – 141 (33.5) ரிதோய் ஹஸ்ஸன் 40, விக்னேஸ்வரன் ஆக்காஷ் 5/27, ரசித் நிம்சார 19/2
இலங்கை – 23/1
போட்டி மழையினால் கைவிடப்பட்டது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<