டுபாய் வந்தடைந்த புஜாரா, விஹாரி: வெளியாகிய காரணம்

138
 

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் முடிந்தவுடன் இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 

இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் நேற்று (25) டுபாயை வந்தடைந்தனர்

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் உட்பட 4 டெஸ்ட், T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்கான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை

தற்போது ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணி வீரர்கள், .பி.எல் முடிந்ததும் நாடு திரும்பாமல் டுபாயில் இருந்து நேரடியாக அவுஸ்திரேலியா செல்ல உள்ளனர்.

சர்வதேச போட்டிகளை மீள ஆரம்பிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

இதனால், .பி.எல் தொடரில் பங்கேற்காத செதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் அவுஸ்திரேலிய செல்லும் இந்திய அணியுடன் இணைந்து கொள்ள நேற்று (25) டுபாயை வந்தடைந்தனர்.

இந்த வீரர்களுடன் இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதரும் டுபாய் வந்தடைந்துள்ளனர்

அத்துடன், தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்றைய தினம் (26) டுபாய் வந்தடையவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ஆஸி. தொடருக்கான டுபாய் வந்தடைந்த அனைவரும் தனி ஹோட்டலில் ஆறு நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Video – “அதிக விமர்சனங்களுக்கு முகங்கொடுப்பவர்கள் தேர்வளார்கள் மாத்திரமே” – பிரெண்டன் குருப்பு

போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், பகலிரவு டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் ஆரம்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கிட்டத்தட்ட 32 இந்திய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வுக்குழு இன்னும் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யவில்லை.

அவுஸ்திரேலியாவில் கொவிட் – 19 வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதனால் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானங்களிலேயே நடைபெற உள்ளன. ஒருநாள் மற்றும் T20i போட்டிகள் சிட்னி, கன்பெராவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறதுமெல்போர்னில் போட்டிகள் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

IPL அரைச்சதம், சிக்ஸர்களில் கோஹ்லி புதிய சாதனை

பிரச்னைகள் அதிகம் இருந்தாலும், பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த தொடர்களை பார்க்க உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்குமுன் 2018-19 ஆண்டில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அவுஸ்திரேலியா அணியை அதனுடைய சொந்த மண்ணில் 2-1 என வீழ்த்தி முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைபற்றி வரலாறு படைத்தது.  

தற்போது மீண்டும் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<