பாகிஸ்தான் சுபர் லீக்கின் ஆரம்ப திகதி அறிவிப்பு

Pakistan Super League 2023

232

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடர் பெப்ரவரி 13ம் திகதி ஆரம்பமாகும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள முதல் போட்டியில் 2022ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாஹூர் கெலண்டர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி

தொடரில் மொத்தமாக 34 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இரண்டு கட்டமாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஆரம்ப போட்டிகள் முல்தான் மற்றும் பேஸ்வரில் நடைபெறவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து கராச்சி மற்றும் லாாஹூரில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதேநேரம் குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டிகள் அனைத்தும் லாஹூர் கடாபி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியானது மார்ச் 19ம் திகதி நடைபெறவுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுபர் லீக்கில் இலங்கை அணியைச் சேர்ந்த முன்னணி வீரர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ ஆகியோர் முதன்முறையாக விளையாடவுள்ளனர்.

இவர்களுடன் சர்வதேசத்தின் நட்சத்திர வீரர்களான ஆதில் ரஷீட், மெதிவ் வேட், ஜிம்மி நீஷம் மற்றும் டெப்ரைஷ் சம்ஷி ஆகிய வீரர்களும் முதன்முறையாக பாகிஸ்தான் சுபர் லீக்கில் விளையாடவுள்ளனர்.

இதேவேளை கடந்தமுறை நடைபெற்ற பாகிஸ்தான் சுபர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி, லாஹூர் கெலண்டர்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<