பங்களாதேஷுக்கு எதிரான T-20 தொடரில் மெதிவ்ஸின் தலைமைப் பதவி சந்திமாலுக்கு

1077

தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி முழுமையாக குணமடையாத காரணத்தினால் பங்களாதேஷ் அணியுடனான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலிருந்தும் இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் பங்கேற்மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அணிக்கு எதிர்வரும் T-20 தொடரில் தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளார்.

[rev_slider LOLC]

பங்களாதேஷுடனான மோதலுக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் சந்தேகம்

தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி..

நீண்ட காலமாக தசைப்பிடிப்பு, கெண்டைக்கால் மற்றும் கணுக்கால் காயங்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற அஞ்செலோ மெதிவ்ஸ், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளின் அணித் தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து கடந்த மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வேயுடனான போட்டியில் துடுப்பெடுத்தாடும்போது மெதிவ்ஸின் தொடைப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனையடுத்து எஞ்சிய ஒரு நாள் போட்டிகளிலிருந்து மெதிவ்ஸ் விலகிக் கொண்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக நாடு திரும்பினார்.

இந்நிலையில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மெதிவ்ஸ் விளையாடலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர் விளையாடமாட்டார் என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை டெஸ்ட் போட்டியில் அவர் விலகியது மட்டுமன்றி, இருபதுக்கு-20 தொடரிலிருந்தும் விலகியுள்ளார். இதனால் இலங்கை அணியின் தலைவர் பொறுப்பை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் பெற்றுள்ளார.

ஐ.சி.சி இன் புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு…

மெதிவ்சின் உபாதை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹம் லெப்ரோய் க்ரிக் இன்போ இணையத்தளத்துக்கு கருத்து வெளியிடுகையில், முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளின் போது உபாதைக்குள்ளான அஞ்செலோ மெதிவ்ஸ் எஞ்சிய போட்டிகளிலும் விளையாடமாட்டார். அவர் உபாதையிலிருந்து குணமடைந்தாலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண முக்கோண T-20 தொடரை கருத்திற்கொண்டு அவருக்கு ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இறுதியாக கடந்த 2016 இறுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது உபாதைக்குள்ளான அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதைக்குள்ளானார். இதனையடுத்து இலங்கை T-20 அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்பட்டிருந்ததுடன், குறித்த தொடரை 2-1 என இலங்கை அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டாக்கா டெஸ்ட்டில் சிறந்த ஆடுகளத்தை எதிர்பார்க்கும் கருணாரத்ன

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்..

இதேநேரம், இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 அணிகளிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்ற லசித் மாலிங்க தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், உள்ளூர் போட்டிகளில் விளையாடுவாராயின் அவரை அணியில் இணைத்துக்கொள்ளவது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்போம். நாம் இதனை மாலிங்கவுக்கு மாத்திரமல்ல, சகல தேசிய மட்ட வீரர்களுக்கும் அறிவித்துள்ளோம். எனினும், முதல்தரப் போட்டிகளில் விளையாடுகின்ற வீரர்களிலிருந்து T-20 போட்டிகளுக்கான வீரர்களைத் தெரிவுசெய்வதென்பது நடைமுறை சாத்தியமற்ற விடயம் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் அதுதான் சரியான முறை. எனவே, தற்போது நாம் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.  

இதேநேரம், பங்களாதேஷ் தொடரிலிருந்து விலகியுள்ள அஞ்செலோ மெதிவ்ஸ், அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு இலங்கை அணியின் இளம் டெஸ்ட் தலைவராக தனது 25ஆவது வயதில் தேர்வான மெதிவ்ஸ் 34 டெஸ்ட் போட்டிகளில் தலைவராக செயற்பட்டு 13 வெற்றி மற்றும் 15 தோல்விகளைப் பதிவு செய்துள்ளார். இதில் 2012ஆம் ஆண்டு தனது முதல் ஒரு நாள் தலைமைப் பொறுப்பை வகித்தது தொடக்கம் 99 போட்டிகளில் தலைமை வகித்து 47 போட்டிகளிலேயே அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றுள்ளார். 46 சந்தர்ப்பங்களில் மெதிவ்ஸின் தலைமையில் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது.

சர்வதேச T-20 போட்டிகளில் மெதிவ்ஸ் தலைமையில் இலங்கை அணி வெறும் 4 போட்டிகளிலேயே வென்று 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.